Saturday, February 4, 2017

பரகாய பிரவேசமும் கூடும் , கூடு விடா நிலையும்

சில நாட்களாய் இந்த ‘பரகாய பிரவேசம்’ என்ற வார்த்தை அடிபடுகிறது.

அதாவது கூடு விட்டு கூடு பாய்தல் என்பதை முன்னிலை படுத்தி. உன்மையில் இந்த பரகாய் பிரவேச கலையில் ரெண்டு விடயம் உள்ளது.


  1. கூடு விட்டு கூடு பாய்தல்.
  2. கூடு விடா நிலை.
ரெண்டாவத்தாய் குறிப்பிடபட்டுள்ள  ’கூடு விடா நிலையை’  அறிவியலும் அனுபவ அறிவியலும் ஏற்கத்தான் செய்யும். 

அதாவது உயிர் / ஆன்மா / அல்லது ஒரு சக்தி எம் கூட்டை ( உடலும் வேறு சில பகுதிகளும்) அகலாமல் ஆனால் சதை உடலை மாத்திரம் விட்டு விலகி நிற்பது. 
உதாரனம்  ; ஒரு தவளை பல வருடம் செத்தது போல் பல வருடம் இருப்பது.

அன்மையில் ஒருவரின் மூளையில் இருந்து உயிருடன் கரப்பான் பூச்சியை சத்திர சிகிச்சை மூலம் எடுத்தனர். எப்பிடி அது உயிருடன் இருந்தது. அது ................. உறுதியாக சொல்ல முடியவில்லை ஆனால் சம்பந்தபடுத்தி தான் பார்க்க வேண்டி உள்ளது.

Wednesday, December 14, 2016

போகரும் நவபாசனமும் - பழனி பிரசாத ரகசியம்

யார் இந்த போகர் ?


இணையத்தில் போகிற போக்கில் தெரிச்சிட்டு போகலாம் வாங்க.
இவர் இந்திய பெருங்கண்டத்தில் வாழ்ந்த ஒரு  சித்தர்.

இந்திய பெருங்கண்டம் என்பது தற்போதைய இந்தியாவை குறிப்பிடாது.அது குமரி கண்ட பரப்பை மற்றும் நேபாளம் பூட்டான் பகுதிகளையும் சேர்த்து தான்.

Saturday, November 21, 2015

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்



நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

Friday, October 31, 2014

மகாபாரதம் உண்மையா ? பொய்யா ?

அப்பாட இனி மஹாபாரததை சாட்டு சொல்லி விசய்(வேண்டுமென்றெ எழுத்து பிழை விடப்பட்டுள்ளது.) டீ வி முன்னாடி உட்கார மாட்டங்க. அரைவாசி பயபுள்ளைங்க டீ வி காரங்க மஹாபாரத்தை மாத்திடாங்க என்று, ஸேடசுல புலம்புராங்க , அது சரி மஹாபாரதம் உன்மையா பொய்யா ? சற்று அது சம்பந்தமான வாதங்களை பார்ப்போம். இவ்வாறன கதை அல்லது சம்பவங்களை நிருபிப்பதற்கு சில அறிவியல் முறைகள் இருக்கின்றன.

  1. Astronomical dating(வான சாஸ்த்திர திகதி ஒப்பீட்டு முறைமை)
  2. Logical arguments (தர்க்க ரீதியாக நிறுவுதல்).
Astronomical dating என்றால் என்ன ? அதாவது நட்சத்திரங்கள் பற்றிய விடயம் ,திதிகள் என்பன கதையில் கூறப்பட்ட படி கதை நடந்த தாக கூறப்படும் காலப்பகுதியில் இருந்திருக்குமா ? என்று வலியுறுத்துவதன் மூலம் கதையின் உண்மைத்தன்மையை rating செய்வதுதான் வான சாஸ்த்திர திகதி ஒப்பீட்டு முறைமை.

மஹாபாரதத்தில் கூறப்படும் நட்ச்ச்த்திர அமைவிடங்கள்,மற்றும் பல முழு நிலவு ,அமாவாசை போன்ற நிகல்வுகள் கதை நடந்ததாய் கூற்ப்படும் காலபகுதியில் இருக்கவேண்டியவாறு பொருந்த்துகிறது.அதிலும் இன்னொரு விடயம் என்ன வென்றால் இரண்டு வான நிகழ்வுகலிற்கான இடைவெளியும் தெள்ளத்தெளிவாக பொறுந்த்துகிறது.5000 வருடங்களின் முன் ஒரு கதை ஆசிரியர் இப்படி ஒரு கற்பனை கதையை எழுதியிருப்பின் இந்த சாத்தியக்கூறு இருந்திருக்காது.


இன்றைய ஆய்வாளர்கள் மட்டும் அல்ல சற்று காலத்தால் முந்திய வாணவியளாளர் ஆரியபட்டா கூட மஹாபாரதம் சரியா பிழையா என நிரூபிக்க எத்தனித்து அது சரியே என சொல்லி சென்று இருகிறார்.


அதை விட மஹாபாரதத்தில் கூறப்படுகின்ற இடங்கள் உன்மையான இடங்களாகவே இருகின்றது.
ஹஸ்தினாபுரம் தற்போதைய உத்தர பிரதேசத்தில் இருக்கிறது.
இந்திர பிரதேசம் / கந்தர்வ பிரதேசம் தற்போதைய டெல்ஹி பகுதியில் அமைந்திருக்கிறது.
துவாரகை கடலில் மூழ்கி தற்போதைய ஆராச்சிகளால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.


மஹா பாரதம் நிஜமே என்பதற்கு சான்றான இரண்டு ஆராச்சி கட்டுரைகளை இனைத்துள்ளேன்.

சரி மஹாபாரதம் ஒரு வேளை பொய்யாக இருந்தால் . 
ஐய்யோ ..... . 
அது பொய் என்று சந்தேகத்தை ஏற்படுத்து காரணிகள் இவைதான் .
  1. கி.மு இரண்டாயிரத்துக்கு முன் இந்திய கண்டத்தில் குதிரைகள் இருந்த சான்று வரலாற்றாலும் அறிவியாலாலும் பிழைக்கிறது.
  2. கதையின் உரை வழக்கு பல்வேறு காலப்பகுதியை சேர்ந்த்தாய் இருக்கிறது, கீதாசாரம் கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு சொந்தமான உரை வழ்க்கை கொண்டு இருக்கிறது.கீதை சொல்லப்பட்ட முறையை “கத்யம் “ என்பார்கள்
    பெரும்பாலான பகுதி கி.மு 3000 கு சொந்தமானதாய்.இருக்கிறது.
  3. வானசாஸ்திற முறைப்படி நிருபிக்க பட்டாலும் கி.மு 3000 நடந்த அதே வாண் நிகழ்வு கிட்டத்தட்ட கி.மு 2000  உடன் பொருந்தலாம்.
  4. மஹாபாரதத்தில் சித்தரிக்கபடும் ஆயுதங்கள் இரும்பாலானவை.இவை ராமாயனத்தில் இருக்கவில்லை.கி.மு 1800 கு முதல் இந்திய பகுதியில் இரும்பு பாவனை இல்லை.
  5. மஹாபரத்தில் கூறப்படும் வானியல் அறிகுறிகளை பிற்கால எழுத்தாளர்கள் சேர்த்திருக்கலாம்.
இரு புற வாதத்தயும் சொன்னாச்சு முடிவை நீங்களே எடுத்துக்ங்கோ . மாற்றுக்கருத்தை comment ஆக போடுங்கோ   .. 













Thursday, October 4, 2012

செ(சொ)ல்லரித்த பக்கங்கள்


 

செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று
சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன்

உன் சேதி சொன்ன காற்று -இன்று
உயிர் குடைந்து அதையும் வாசித்ததே

தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி
தொந்தரவாய் என்மீது மோத செய்வதேனோ

மீண்டிருக்கையில் என் நரம்பு கொண்டு -இசை
மீட்டி கொள்ள ஆசையோ கொன்று போனவளே

நிலவில்லா இரவென்றாலும் ஓளி தெரிந்தது
நீளும் கனவுகளில் கூட உன்னை மறந்த போது

மீண்டும் செல்லரிக்க சொல்லெடுக்காதே
மீறிய கனத்தால் நின்று விடும்
என் இதயம் ஒற்றை கணத்தில் !

Monday, October 1, 2012

உணராத மாற்றங்கள் நம்மை சுற்றி


மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் !
மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் !



நம்மால் என்றுமே தனித்து முடிவு எடுக்க முடியாது ! நம்மையும் நம் செயல்களையும் புற சூழல் என்பது கட்டு படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை !
இதிலும் பிரச்சனைகள் என்பது எம்மை வலுவே கட்டுபடுத்துகிற ஒன்றாய் ஆட்டி படைக்கிறது .

ஒரு பிரச்சனை எம்மை சூழ்ந்த வுடன் உடனடியாக அதில் இருந்து மீள முயற்சிக்கிறோம் ,இதற்க்கு மிக பிரயத்தனபடுகிறோம். ஒன்று நாம் ஜெயிக்கிறோம் அல்லது பிரச்சனை ஜெய்க்கிறது !

நாம் ஜெயித்து  விட்டால்
  • எதற்காக பிரச்சனையை

Friday, September 21, 2012

300-500 மில்லியன் கொலைகள் செய்த உலகின் கொலையாளி !



ஏதோ படுகொலை பற்றி இருக்கும் என நினைத்து  விடாதீர்கள்   இது உறங்கிக்கொண்டு   அவ்வப்போது படை எடுக்கும்  ஒரு நோயை பற்றிய சிறு அறிமுகம் !அது தாங்க சின்ன அம்மை !(smallpox ).
SmallPox
Small Pox -The Greatest Killer



இந்த நோயை பொறுத்தவரை தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்திவிட்டோம்   என்று மனித இனம் மார் தட்டி கொள்வது ,பூனை கண்ணை மூடி பால் குடிக்கிறதை போன்றது ,இது எப்போது வேண்டுமென்றாலும் விழித்து
கொள்ள கூடிய ஒரு நோய் என்பது தான் உண்மை !

கொஞ்சம் பொறுங்க,ஏழாம் அறிவு பற்றி ஜோசிக்க தொடக்கி விடாதீர்கள் !அங்கு இது போன்ற ஒரு நோய் தானே விழித்து
கொள்ள வில்லை ,சினிமாக்காய்
விழிக்க  வைகிறார்கள் !அந்த கதையின் உண்மை தன்மை  பற்றி நான் இங்கு ஆராயவில்லை !
                        "புதுசு புதுசா நோயெல்லாம் வருது"
பொதுவாக மக்கள் இந்த வார்த்தையை கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் !
  • இதன்  நிஜ தன்மை என்ன ?
  • உண்மையில்   புதிதாய் நோய்கள் வருகிறதா ?
அல்லது
  • நாம் இன்று காணும் நோய்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததா?
கொஞ்சம் ஆராய்ந்து பாப்போம் ?