Saturday, December 17, 2011

வேட்டை பாடல் உருவாக்கம் -புதிய சினி கலாசாரம்
why htis kolaiveri வரிசையில் தங்கள் முயற்சி ஜெயகுமா என பாடல் உருவாக்கத்தை பாடலுடன் சேர்த்து வெள்ளியிட்டு வேட்டையாட நினைக்கிறது வேட்டை திரைகுழு

மச்ச சாஸ்திரம்


ஆண்களுக்கான மச்ச பலன்கள்

புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் – தனயோகம்
வலது புருவம் – மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் – நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் – அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலனகள்

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை – பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

Friday, October 7, 2011

Steve jobs இன் சில தருணங்களும் Apple இன் வளர்ச்சி தாவல்களும்மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த Steve jobs இன் திடீர் பிரசன்னம் .Apple தயாரிப்பான Ipad2  ஐ அன்று அறிமுக படுத்தினார். பல்வகை வர்ண Smart cover உடன் வெளியிடப்பட்டது .முன்னாலும் பினாலும் கேமரா வசதி இணைக்க பட்டமை ipad2 இன் சிறப்பு அம்சம்.இந்த நிகழ்வில் Steve jobs "இதற்காக நாம் நீண்ட நாள் உழைத்திருக்கிறோம் i இந்த தருணத்தை தவற விட நான் விரும்பவில்லை" என தெருவித்தார்


2010
99 அமெரிக்க டாலர் இக்கு Apple Tv 99cents கட்டணத்தில் onlinetvshow  உடன் அறிமுகம் செய்யப்பட்டது .இதற்கு பிரபல் holliwood studio களும்  பிரபல Broadcast நிறுவனங்களான CBS and NBC தம் சேவைகள் இந்த ஆப்பிள் டிவி இல் இணைக்க படுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்தன.

2010
Iphone 4  steve jobs ஆல் அறிமுகம் செய்து வைக்க பட்டது."iphone  வரலாறில் இது ஒரு பெரிய பாச்சல்"  என   steve jobs   இந் நிகழ்வில் தெரிவித்தார்.இதில் வீடியோ Calling வசதி இணைக்க பட்டுள்ளமை  சிறப்பம்சம்

2010
Ebooks வாசித்தல்,இணையத்தளங்களை பார்த்தல், video பார்த்தல் போன்றவற்றை  செய்ய கூடிய Ipad  இணை Steve jobs கையில் தாங்கி  இருக்கிறார்.
2008
Macbookன் புதிய versionகளான Macbook,Mackbook Pro களை apple  தலைமையகத்தில்  Steve jobs அறிமுகம்  செய்து  வைக்கிறார்Friday, September 30, 2011

நீங்க ஜிம்முக்கு போறவரா இதையும் பாருங்க Fun Only
7 ஆம் அறிவு பாடலின் தயாரிப்பு ringa ringa Vedio

சூரியா உட்பட பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்

7 ஆம் அறிவு Trailor ,audio launch

எட்டு திசையிலும் உள்ள சினிமா ரசிகர்களின் ஆறறிவுக்கு அப்பால் தற்போது சூரியாவின் 7 ஆம் அறிவு பட்டையை கிளப்பை கொண்டு இருக்கிறது.
7ஆம் அறிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இப்படம் 25 திரையரங்குகளில் வெளியாகிறது.

Saturday, May 21, 2011

finger print scanner திருடலாமா ?சாத்தியமா?

please click on and shre on facebook
உலகின் தொழில்நுட்பம் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிக்கொண்டு இருக்கிறது .நேற்று கண்ட காட்சி இன்று பழமையை தோன்றுகிறது இதன் வேகம் கண்ணிமைக்கும் பொழுது என்று கூறுவது கூட பொருந்துமா? என்பது கூட சந்தேகம் தான்..................


இரும்பு கதவுகளை போட்டு காவலுக்கு காவலனை நிறுத்தி காவல் காத்த மனித குலம் இன்று கண்ணாடி கதவை போட்டு விட்டு நவீன கருவிய பொருத்தி விட்டு உறங்கும் காலம் ஆகி விட்டது .இப்படி தான் பாதுகாப்புக்கு திறப்பு ,கடவுச்சொல்,plastic அடையாள அட்டை என அறிவியல் உலகத்தின் ஒரு படி தான் கைவிரல் அடையாள கருவிகள் .(finger print scanners).


இந்த கருவியின் அடிப்படை என்ன ,எப்படி இயங்குகிறது ?,இதன் பாதுகாப்பு தன்மை என்ன ?,இது எவ்வாறு திருடப்படலாம் ? என்று தான் இந்த கட்டுரை ஆய்கிறது .
முதலில் கைரேகையின் அடிப்படை என்ன என தெரிந்துகொள்வோம் .கை விரல் ரேகையை பார்த்தோமானால் அதில் மேடான கோடுகள் ,பள்ளங்கள் என இரண்டு விடயங்கள் இருகின்றன .மேடுகள் - rides , பள்ளங்கள் - valleys .

இந்த இரெண்டும் தான் கை ரேகைகளை வேறுபடுத்தும் அடையாளங்கள் .எப்படி கை ரேகை கல் ஒருத்துக்கொருத்தர் வேறுபடுகிறது .இதனை தீர்மானிப்பது மரபணுக்கள். ஆனால் தனியே மரபணுக்கள் தீர்மானிகிறது என்றால் இரத்த உறவுகளின் கை ரேகைகள் ஒன்றாக அமைய வேண்டுமே?ஆனால் அது தான் இல்லை மரபணு மாத்திரமன்றி இன்னும் பல காரணிகளும் இதை தீர்மானிகிறது .எம் கைரேகை முதல் ஆரம்பம் கருப்பையில் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் மரபணுவுடன் எதேட்சயான ஒரு மாறும் கணியம் சேர்ந்து கைரேகை காண அடிப்படை இடப்படுகிறது .இது கைரேகைகள் உறவினர் களிடையே ஒத்திருப்பதை தவிர்கிறது .சிசு கருப்பையில் இருக்கும் போது சிசுவை சூழ amniotic என்ற திரவம் காணப்படும் இது கைரேகையை அடுத்த படியாக தீர்மானிகிறது .இந்த திரவத்தின் சேர்மான விகிதங்கள் ஒவ்வொரு தாய்க்கும் வேறுபடுகிறது .இதை விட ஒவ்வொரு பிரசவத்தின் போதும் வேறுபடுகிறது .இதை விட கற்ப காலத்தில் உள்ள புற சூழலின் காரணமாகவும் இத்திரவம் மாறுபடும்(மலை சூழல்,கோடை ).சிசுவின் கைரேகை உருவாகும் கணிப்பு நடை பெரும் சூழலில் உள்ள திரவ விகிதாசாரம் ,அடர்த்தி என்பனவும் கைரேகையின் அமைப்பை தீர்மானிக்கும் .ஆக மொத்தத்தில் ஒரேபோல கைரேகை உருவாவது சாத்தியம் இல்லை என்பது மாத்திரம் உண்மை என உங்களுக்கு புரிந்திருக்கும் . சரி இனி கருவியின் செயற்பாட்டை பார்ப்போம்.இரண்டு வகை கருவிகள் இருகின்றன ஒன்று optical finger print scanner (ஒளியியல் கைரேகை ஆய்கருவி ). மற்றது capacitance fingerprint scanner
இரெண்டும் முதலில் வைக்கப்படும் கைரேகையின் அமைப்பை பெற்று கொள்ளும் பின் ஏற்கனவே குறித்த கருவியில் சேமிக்க பட்டுள்ள மாதிரி களுடன் பொருந்துகிறதா என ஒப்பிட்டு பார்க்கும் .ஆனால் இவை வைக்கப்படும் கை ரேகையின் மாதிரியை பெற பயன் படுத்தும் முறைகள் தான் முக்கியமானவை .
optical finger print scanner

ஒளியியல் கருவி எப்படி செயற்படுகிறது என பார்ப்போம் . இது தரமான led வகை மின்குமிழ் மூலம் முதலில் கைவிரலை நோக்கி ஒளியை செலுத்தும் .பின்னர் கை விரலில் பட்டு தெறிக்கும் ஒளியை photon diodes (ஒளிக் கேற்றப மாறும் தடையி ) மூலம் உருவாக்க பட்ட charge coupled device (CCD) மூலம் ஒளியியல் படம் ஆக பெற்று கொள்ளும் .அதிக ஒளி தெறித்த பகுதி இருண்டபிரதேசமாயும் (மேடு)குறைந்த ஒளி தெறித்த பகுதி பிரகாசம் குறைந்த பகுதியாகவும்(பள்ளம் ) படத்தில் அமையும் .
 .............................................................................................................................................................
இவ்வாறு பெற்ற கைவிரல் அடையாளத்தை darkness தரம் சரியாக உள்ளதா என சரிபார்க்கும் .இது சரியாக இல்லாவிடின் மறுபடியும் தன் ஒளியின் அளவு scan செய்ய எடுக்கும் நேரத்தை மாற்றி மீண்டும் பிரதி எடுக்கும் .

darkness சரியாக அமைந்து விட்டால் image defination ஐ சரிபார்க்கும் (அதாவது pixel) .இதற்கு கிடையாகவும் நிலைக்குத்தாகவும் ஒளியியல் கோடுகளை ஓட விடும் (நகர்த்தும் என்று கூறலாம் ).இதன் பின் மாதிரிக்கு செங்குத்தாக ஒளியில் கொடு செலுத்த பட்ட சரிபார்க்கப்படும் .இந்த சரிபார்ப்புகள் சாதகமாக இருந்தால் எடுக்கப்பட்ட பிரதி ஒப்பீடு செயற்பாட்டுக்கு அனுப்பப்படும் இதன் பாதகம் என்ன என்றால் ஒருகைவிரல் போன்ற பிரதியை செலோபேன் கடதாசி .ஒரு ரக பொடி கொண்டு உருவாக்கி விடலாம் .அந்த கடதாசியை உணரியில் வைத்தால் திறந்திடும் பாதுகாப்பு கவசம் .


capacitance fingerprint scanner


இது மின்னியல் அடிப்படையில் இயங்குகிறது .மேலே கூறிய கருவியை விட சிறந்த ஒன்று .
இதன் தத்துவம் கொள்ளலவிகளை (capaciters ) அடிப்படையாக கொண்டது .கொள்ளவிகளின் இரு தகடுகளுக்குமான அழுத்த வேறுபாடு அத் தகடுகளுக்காண இடைவெளியில் தங்கியுள்ளது .இதனையே இக்கருவியும் பயன் படுத்துகிறது .நாம் கைவிரலை வைக்கும் மேற்பரப்பு பல சதுரங்களாக (cells) பிரிக்க பட்டு இருக்கும் .இது எம் ரேகையி அகலத்தை விட சிறிய சதுரம் .
இந்த cells ஒவ்வொன்றும் சிறு கடத்தும் தன்மை உள்ள தகட்டை கொண்டு இருக்கும் .இது கொள்ளலவியின் ஒரு தகடாகவும் எம் கை மற்றைய தகடாகவும் அமையும் .மேடுக்கும் தகட்டுக்கும் இடையான தூரம் குறைவு. பள்ளத்துக்கும் தகட்டுக்குமான தூரம் அதிகம் .இது வேறுபட்ட மின் அழுத்த வேறுபாடுகளை உருவாக்கும் இதன் அடிப்படையில் ரேகை அமைப்பின் விம்பத்தை கருவி பெற்று கொள்ளும் .இதில் மேலும் அனுகூலம் மேடு பள்ளங்களின் உயரங்களை கூட கருவி பெற்று கொள்ளும் .
பின் தன்னிடம உள்ள பழைய மாதிரிகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் .
இதை மற்றைய கருவி யை போல ஏமாற்ற முடியாது என்றாலும் இதை ஏமாற்ற ஒரு வழி இருக்கிறது .கை ரேகை களின் முப் பரிமாண அச்சுகளை (moulds ) உருவாக்கி ஏமாற்றலாம் .ஏன் சிலவேளை ஒருத்தரின் விரலை வெட்டி கூட பயன் படுத்தலாம் .
இந்த இரண்டு பிரட்சனைக்கும் தீர்வாக நவீன capacitancescanners இல் விரல் நாடி துடிப்பையும் வெப்பத்தையும் சரிபார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டது .இதற்கு jelattin என்ற பதார்த்தத்தில் தயாரிக்கப்பட்ட போலி ரேகை உரையை எம் விரலில் ஒட்டி ஏமாற்றிவிடலாம் ........இந்த எல்லா முறைக்கும் உண்மை யான வரின் கைவிரலை ஒருமுறை நெருங்க வேண்டும் .ஆனால் கணணி வலை அமைப்பில் தேர்சி பெற்ற ஒருவருக்கு இதெல்லாம் அவசியம் இல்லை .நேரடியாக கருவியின் தரவு தளத்துக்கு சென்று தன் ஒப்பிடு பார்க்க பட்ட தாக பொய் தகவலை கருவிக்கு வழங்கி விட்டால் போதும் நுட்பத்தின் மர்ம குகை திறந்து விடும் .அந்நாள் இவ்வாறு செய்பவர் தரவு தளத்தில்தன் கைரேகை பதிவை சேர்த்து விட்டு தன் விரலை கருவி மீது வைத்து திறக்கலாம் .ஆனால் அவரின் கை ரேகை காவல் துறை கைவசம் சென்று விடும் ..

Friday, April 22, 2011

கலக்கும் 7 வரிசையில் x7

தினம் ஒரு புதிய படைப்புகள் வெளி வந்த வண்ணம் உள்ளன .இந்த வரிசையின் தற்போதைய புதிய nokia வின் வெளியீடு வெளிவந்துள்ளது .நோக்கியா x7  என்பதுதான் இதன் பெயர். இது கேம்ஸ் விளையாடுவதில் பிரியம் கொண்டவர்களுக்கான விசேட தயாரிப்பு  என நோக்கியா தெரிவித்துள்ளது

இதன் விலை 547$ 
 ஆனால் அப்படி சொல்வதை விட புகைப்படம் ,வீடியோ போன்றவற்றை போனில் கையால் பவர்களுக்கான விசேட தயாரிப்பு என்ன செல்பேசி வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .காரணம் இதன் இரட்டை led  பிளாஷ் விளக்கு மற்றும் 8 megapixel rear கேமரா வசதி ,4 அங்குலம் வரையான திரை மற்றும் 720p hd வீடியோ ஸ்டீமிங் வசதி என்பனவே இவ்வாறு வல்லுனர்கள் முக்கித்துவம் கொடுக்க காரணம் .Galaxy on Fire,Asphalt 5 HD ஆகிய செல்பேசி விளையாட்டுகள் இத்தொலைபேசியுடன்  இணைக்கப்பட்டு  வருகிறது .மேலும் ovi தளத்தில் உள்ள விளையாட்டுகளை இணைத்து கொள்ளவும் முடியும்

Tuesday, April 12, 2011

மலேசியா பாலத்தை முறியடித்த அபுதாபி இணைப்பு பாலம்

உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன .
விண்ணை முட்டும் கோபுரங்கள் எழுந்த  வண்ணம்  உள்ளன .இந்த வரிசையில் உலகில் மிக உயரத்தில் உள்ள இணைப்பு பாலம் என்ற பெயரை இதுவரை  மலேசியாவில் உள்ள Petronas Tower  என்ற கோபுரத்தில் உள்ள இணைப்பு கோபுரமே கொண்டிருந்தது. ஆனால் இதனை தற்போது ஐக்கிய அரபு ராச்சியத்தில்  அபுதாபியில் உள்ள nation towers என்ற இரட்டை கோபுரங்களை இணைக்கும் இணைப்பு பாலம் இந்த சாதனையை முறியடித்துள்ளது . nation tower 1 மற்றும்  nation tower 2  ஆகியவற்றின் 50 மற்றும் 54 ஆவது மாடிகளை  இணைக்கும் இணைப்பு பாலம் இந்த சாதனை பெயரை கடந்த april 10 ஆம் திகதி பெற்று கொண்டுள்ளது .

இது தரை மட்டத்தில் இருந்து 202.5 meter  உயரத்தில் அமைந்துள்ளது .இது மலேசிய பலத்தை விட 30 meter  கூடுதலான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இப்பாலத்தை தரையில் வைத்து வடிவமைத்து பின்னர் நீரியல் உயர்த்திகளை பாவித்து  உயர்த்தி பொருத்தியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது .
கோபுரங்கள் இணைவது போல மனித மான்களும் இணைந்துகொண்டால்  தான் உயர்ந்த கோபுரங்கள் இடிக்கப் படாமல் இருக்கும்

Thursday, March 17, 2011

ஈரானின் விண்வெளி பயணத்தின் அடுத்த கட்டம்

மனிதன் தன் எல்லைகளை பூமியில் மட்டுமல்ல அண்ட வெளியிலும் விஸ்தரிக்க ஒவ்வொரு நொடியும் ஆர்வமாய் இருந்தான் .ஆனால் சளைக்காத இயற்கை நானும் இருக்கிறேன் என பறை சாற்றும் வகையில்  தன் வல்லமையின் ஒரு பகுதியை (trailor காட்டியுள்ளது ) வெளி காட்டியதும் அதிர்த்து போனது மனித குலம்.2004 சுனாமி அதை தொடர்ந்து  பாரிய புயல்கள் ,தொடர் நில அதிர்வு ,சூரிய காந்த கதிர்களின் தாக்கம் என விழுந்த தொடர் சாட்டைகளால் சுருண்டு கொண்டது மனிதனின் முயற்சிகள் .discovery ஓடம் சிதறியதும் விண்ணுக்கு மனித  சஞ்சாரம் அதை தொடர்ந்து வின்வெளி ராணுவம் என்ற அமெரிக்க ஏகாதிபத்திய கனவு கலைந்தது .ஆனால்  ஈரான் மட்டும் சலித்த தாகவோ பயந்ததாகவோ தெரிய வில்லை.ஒரு வேளை அரபு நாடுகள் இன்னும் இயற்கையால்  பாதிக்கபடாதது,சமீப காலத்தில்  இத்துறையில் பிரவேசித்தமை என்பன காரணமாக இருக்கலாம் .இந்நிலையில் தான் கடந்த செவ்வாய் கிழமை 15 ஆம்  திகதி ஈரான் தன சோதனை முயற்சியாக
Kavoshgar-4  என்ற ராக்கெட் ஐ ஏவியுள்ளது .இதில் விசேட அம்சம் என்ன என்றால் ஒரு குரங்கு ஒன்றை வைத்து அனுப்ப கூடிய கூடாரம் ஒன்றை வெறுமையாக அந்த ஓடத்துடன் சேர்த்து அனுப்பியுள்ளது .இது  மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இலக்கின் முதற் படி என ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.2020 இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்புதல் ,2025 இல் சந்திரனுக்கு மனித காலடி பதித்தல் என்பன தம் நிகழ்ச்சி நிரலில் அடங்குவதாக ஈரானிய அரசு தெரிவுத்துள்ளது.எனினும் இது ஒரு விண்வெளி  ரீதியான உயிரியல் ஆயுத யுத்தத்துக்கான ஈரானின் தயார் படுத்தல் என ஐரோப்பிய நாடுகள் ,மற்றும் அமெரிக்கா தெரிவுத்துள்ளன .இதுவரை ஈரான் மேற்கொண்ட விண்வெளி  முயற்சிகள்
2008 august ---  Safir ("Ambassador") booster entra விண்கலம் ஏவப்பட்டு தோல்வியில் முடிந்தது.


2009 Safir-2 thakaval தொடர்பாடல்  செய்மதிகளுடன் ஏவப்பட்டது.
2010    February --- Kavoshgar-3  ஒரு எலி ,ஒரு புழு ,இரண்டு ஆமைகள் என்பனவற்றுடன் ஏவப்பட்டது .நேவ்போர்ட்,நவல்  வார்  காலேஜ் ஐ சேர்ந்த பாதுகாப்பு கற்கை நெறிகளுக்கான பேராசிரியர் தெரிவித்துள்ளமையானது
"ஈரான் தனது நிகழ்சி நிரலில் இரட்டை தொழில் நுட்ப கோட்பாட்டை(dual-technology) பயன்படுத்துவதன் மூலம் விரைவான வளர்ச்சியை எதிர்பார்பதுடன் சர்வதேச சட்ட சிக்கல் களில் இருந்து இலகுவாக தப்ப கூடிய ராஜதந்திரத்தை பயன்படுத்துகிறது ."
 


 ஈரான் வெற்றி கொள்ளுமா அல்லது இவை தடுத்து நிறுத்தபடுமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .ஈரான் இயற்கையை பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும் .எது எப்படி இருப்பினும்வேற்று கிரக வாசிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரின் ஒரு நாடு தேனும் அதை எதிர்  கொள்ளும் நுட்பத்தை கொண்டிருக்க வேண்டும் .இந்த தகமையை நிச்சயம் அமெரிக்கா தக்க வைத்து கொள்ள ஈரானுடன் போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை .