Thursday, March 17, 2011

ஈரானின் விண்வெளி பயணத்தின் அடுத்த கட்டம்

மனிதன் தன் எல்லைகளை பூமியில் மட்டுமல்ல அண்ட வெளியிலும் விஸ்தரிக்க ஒவ்வொரு நொடியும் ஆர்வமாய் இருந்தான் .ஆனால் சளைக்காத இயற்கை நானும் இருக்கிறேன் என பறை சாற்றும் வகையில்  தன் வல்லமையின் ஒரு பகுதியை (trailor காட்டியுள்ளது ) வெளி காட்டியதும் அதிர்த்து போனது மனித குலம்.2004 சுனாமி அதை தொடர்ந்து  பாரிய புயல்கள் ,தொடர் நில அதிர்வு ,சூரிய காந்த கதிர்களின் தாக்கம் என விழுந்த தொடர் சாட்டைகளால் சுருண்டு கொண்டது மனிதனின் முயற்சிகள் .discovery ஓடம் சிதறியதும் விண்ணுக்கு மனித  சஞ்சாரம் அதை தொடர்ந்து வின்வெளி ராணுவம் என்ற அமெரிக்க ஏகாதிபத்திய கனவு கலைந்தது .ஆனால்  ஈரான் மட்டும் சலித்த தாகவோ பயந்ததாகவோ தெரிய வில்லை.ஒரு வேளை அரபு நாடுகள் இன்னும் இயற்கையால்  பாதிக்கபடாதது,சமீப காலத்தில்  இத்துறையில் பிரவேசித்தமை என்பன காரணமாக இருக்கலாம் .இந்நிலையில் தான் கடந்த செவ்வாய் கிழமை 15 ஆம்  திகதி ஈரான் தன சோதனை முயற்சியாக
Kavoshgar-4  என்ற ராக்கெட் ஐ ஏவியுள்ளது .



இதில் விசேட அம்சம் என்ன என்றால் ஒரு குரங்கு ஒன்றை வைத்து அனுப்ப கூடிய கூடாரம் ஒன்றை வெறுமையாக அந்த ஓடத்துடன் சேர்த்து அனுப்பியுள்ளது .இது  மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இலக்கின் முதற் படி என ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



2020 இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்புதல் ,2025 இல் சந்திரனுக்கு மனித காலடி பதித்தல் என்பன தம் நிகழ்ச்சி நிரலில் அடங்குவதாக ஈரானிய அரசு தெரிவுத்துள்ளது.எனினும் இது ஒரு விண்வெளி  ரீதியான உயிரியல் ஆயுத யுத்தத்துக்கான ஈரானின் தயார் படுத்தல் என ஐரோப்பிய நாடுகள் ,மற்றும் அமெரிக்கா தெரிவுத்துள்ளன .இதுவரை ஈரான் மேற்கொண்ட விண்வெளி  முயற்சிகள்
2008 august ---  Safir ("Ambassador") booster entra விண்கலம் ஏவப்பட்டு தோல்வியில் முடிந்தது.






2009 Safir-2 thakaval தொடர்பாடல்  செய்மதிகளுடன் ஏவப்பட்டது.




2010    February --- Kavoshgar-3  ஒரு எலி ,ஒரு புழு ,இரண்டு ஆமைகள் என்பனவற்றுடன் ஏவப்பட்டது .



நேவ்போர்ட்,நவல்  வார்  காலேஜ் ஐ சேர்ந்த பாதுகாப்பு கற்கை நெறிகளுக்கான பேராசிரியர் தெரிவித்துள்ளமையானது
"ஈரான் தனது நிகழ்சி நிரலில் இரட்டை தொழில் நுட்ப கோட்பாட்டை(dual-technology) பயன்படுத்துவதன் மூலம் விரைவான வளர்ச்சியை எதிர்பார்பதுடன் சர்வதேச சட்ட சிக்கல் களில் இருந்து இலகுவாக தப்ப கூடிய ராஜதந்திரத்தை பயன்படுத்துகிறது ."
 


 ஈரான் வெற்றி கொள்ளுமா அல்லது இவை தடுத்து நிறுத்தபடுமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .ஈரான் இயற்கையை பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும் .எது எப்படி இருப்பினும்வேற்று கிரக வாசிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரின் ஒரு நாடு தேனும் அதை எதிர்  கொள்ளும் நுட்பத்தை கொண்டிருக்க வேண்டும் .இந்த தகமையை நிச்சயம் அமெரிக்கா தக்க வைத்து கொள்ள ஈரானுடன் போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை .