நானின்றி இருக்கிறது ஒரு கூட்டம்
என்று சொல்ல வந்தியோ !
நாளை வரும் அழிவு வந்து போக நானும் வருவேன்
என்று சொல்ல வந்தியோ !

அணு உலை தேவை என்று காட்ட
உன்னை அனுப்பி வைத்தனரோ !
அசட்டை தனம் தான் இங்கு என்று சொல்லி வா என்று
உன்னை அனுப்பி வைத்தனரோ!


சொல்லாமல் வந்தாய் -சொல்லொண்ண துயரம்
தந்தே போனாய் !
சொல்ல வந்தியோ தினம் இத்துணை
தந்தே போகிறேன் என்று !

சொல்லி அனுப்புகிறோம் -முடிந்தவரை
வராதே என்று !
வந்தாலும் சென்று விடு -இருண்ட வாழ்வை
இரெட்டிப்பாய் இருட்டிவிடாமல்