Thursday, October 4, 2012

செ(சொ)ல்லரித்த பக்கங்கள்


 

செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று
சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன்

உன் சேதி சொன்ன காற்று -இன்று
உயிர் குடைந்து அதையும் வாசித்ததே

தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி
தொந்தரவாய் என்மீது மோத செய்வதேனோ

மீண்டிருக்கையில் என் நரம்பு கொண்டு -இசை
மீட்டி கொள்ள ஆசையோ கொன்று போனவளே

நிலவில்லா இரவென்றாலும் ஓளி தெரிந்தது
நீளும் கனவுகளில் கூட உன்னை மறந்த போது

மீண்டும் செல்லரிக்க சொல்லெடுக்காதே
மீறிய கனத்தால் நின்று விடும்
என் இதயம் ஒற்றை கணத்தில் !

Monday, October 1, 2012

உணராத மாற்றங்கள் நம்மை சுற்றி


மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் !
மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் !



நம்மால் என்றுமே தனித்து முடிவு எடுக்க முடியாது ! நம்மையும் நம் செயல்களையும் புற சூழல் என்பது கட்டு படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை !
இதிலும் பிரச்சனைகள் என்பது எம்மை வலுவே கட்டுபடுத்துகிற ஒன்றாய் ஆட்டி படைக்கிறது .

ஒரு பிரச்சனை எம்மை சூழ்ந்த வுடன் உடனடியாக அதில் இருந்து மீள முயற்சிக்கிறோம் ,இதற்க்கு மிக பிரயத்தனபடுகிறோம். ஒன்று நாம் ஜெயிக்கிறோம் அல்லது பிரச்சனை ஜெய்க்கிறது !

நாம் ஜெயித்து  விட்டால்
  • எதற்காக பிரச்சனையை