Friday, October 31, 2014

மகாபாரதம் உண்மையா ? பொய்யா ?

அப்பாட இனி மஹாபாரததை சாட்டு சொல்லி விசய்(வேண்டுமென்றெ எழுத்து பிழை விடப்பட்டுள்ளது.) டீ வி முன்னாடி உட்கார மாட்டங்க. அரைவாசி பயபுள்ளைங்க டீ வி காரங்க மஹாபாரத்தை மாத்திடாங்க என்று, ஸேடசுல புலம்புராங்க , அது சரி மஹாபாரதம் உன்மையா பொய்யா ? சற்று அது சம்பந்தமான வாதங்களை பார்ப்போம். இவ்வாறன கதை அல்லது சம்பவங்களை நிருபிப்பதற்கு சில அறிவியல் முறைகள் இருக்கின்றன.

  1. Astronomical dating(வான சாஸ்த்திர திகதி ஒப்பீட்டு முறைமை)
  2. Logical arguments (தர்க்க ரீதியாக நிறுவுதல்).
Astronomical dating என்றால் என்ன ? அதாவது நட்சத்திரங்கள் பற்றிய விடயம் ,திதிகள் என்பன கதையில் கூறப்பட்ட படி கதை நடந்த தாக கூறப்படும் காலப்பகுதியில் இருந்திருக்குமா ? என்று வலியுறுத்துவதன் மூலம் கதையின் உண்மைத்தன்மையை rating செய்வதுதான் வான சாஸ்த்திர திகதி ஒப்பீட்டு முறைமை.

மஹாபாரதத்தில் கூறப்படும் நட்ச்ச்த்திர அமைவிடங்கள்,மற்றும் பல முழு நிலவு ,அமாவாசை போன்ற நிகல்வுகள் கதை நடந்ததாய் கூற்ப்படும் காலபகுதியில் இருக்கவேண்டியவாறு பொருந்த்துகிறது.அதிலும் இன்னொரு விடயம் என்ன வென்றால் இரண்டு வான நிகழ்வுகலிற்கான இடைவெளியும் தெள்ளத்தெளிவாக பொறுந்த்துகிறது.5000 வருடங்களின் முன் ஒரு கதை ஆசிரியர் இப்படி ஒரு கற்பனை கதையை எழுதியிருப்பின் இந்த சாத்தியக்கூறு இருந்திருக்காது.


இன்றைய ஆய்வாளர்கள் மட்டும் அல்ல சற்று காலத்தால் முந்திய வாணவியளாளர் ஆரியபட்டா கூட மஹாபாரதம் சரியா பிழையா என நிரூபிக்க எத்தனித்து அது சரியே என சொல்லி சென்று இருகிறார்.


அதை விட மஹாபாரதத்தில் கூறப்படுகின்ற இடங்கள் உன்மையான இடங்களாகவே இருகின்றது.
ஹஸ்தினாபுரம் தற்போதைய உத்தர பிரதேசத்தில் இருக்கிறது.
இந்திர பிரதேசம் / கந்தர்வ பிரதேசம் தற்போதைய டெல்ஹி பகுதியில் அமைந்திருக்கிறது.
துவாரகை கடலில் மூழ்கி தற்போதைய ஆராச்சிகளால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.


மஹா பாரதம் நிஜமே என்பதற்கு சான்றான இரண்டு ஆராச்சி கட்டுரைகளை இனைத்துள்ளேன்.

சரி மஹாபாரதம் ஒரு வேளை பொய்யாக இருந்தால் . 
ஐய்யோ ..... . 
அது பொய் என்று சந்தேகத்தை ஏற்படுத்து காரணிகள் இவைதான் .
  1. கி.மு இரண்டாயிரத்துக்கு முன் இந்திய கண்டத்தில் குதிரைகள் இருந்த சான்று வரலாற்றாலும் அறிவியாலாலும் பிழைக்கிறது.
  2. கதையின் உரை வழக்கு பல்வேறு காலப்பகுதியை சேர்ந்த்தாய் இருக்கிறது, கீதாசாரம் கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு சொந்தமான உரை வழ்க்கை கொண்டு இருக்கிறது.கீதை சொல்லப்பட்ட முறையை “கத்யம் “ என்பார்கள்
    பெரும்பாலான பகுதி கி.மு 3000 கு சொந்தமானதாய்.இருக்கிறது.
  3. வானசாஸ்திற முறைப்படி நிருபிக்க பட்டாலும் கி.மு 3000 நடந்த அதே வாண் நிகழ்வு கிட்டத்தட்ட கி.மு 2000  உடன் பொருந்தலாம்.
  4. மஹாபாரதத்தில் சித்தரிக்கபடும் ஆயுதங்கள் இரும்பாலானவை.இவை ராமாயனத்தில் இருக்கவில்லை.கி.மு 1800 கு முதல் இந்திய பகுதியில் இரும்பு பாவனை இல்லை.
  5. மஹாபரத்தில் கூறப்படும் வானியல் அறிகுறிகளை பிற்கால எழுத்தாளர்கள் சேர்த்திருக்கலாம்.
இரு புற வாதத்தயும் சொன்னாச்சு முடிவை நீங்களே எடுத்துக்ங்கோ . மாற்றுக்கருத்தை comment ஆக போடுங்கோ   ..