Thursday, February 23, 2012

மார்ச் 16 google வைக்க போகும் ஆப்பு ,இழுப்பது எப்படி ?

தகவல் தொழில் நுட்ப துறை உச்ச வேகத்தில் வளர்ந்து வருகிற நிலையில் இணையமும் அதன் துணை சேவைகளும் நாளும் பொழுதும் புது புது பரிணாமம் எடுத்து வருகின்றன .ஒவ்வொரு நிறுவனமும் தனி நபரும் நாளும் என்பதை விட மணிக்கு ஒரு புதிய வசதியை தருகிற வேளை செக்கனுக்கு செக்கன் பாதுகாப்பு கேள்விக்குறிகள் வந்த வண்ணம் இருந்கின்றன .

இதனால் ஒவ்வொரு இணைய பாவனையாளனும் தன்னையும் தன்னை பற்றிய தரவுகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது .சில சமயம் நாம் எவற்றை அதிகம் பயன்படுத்துகிறோமோ அல்லது எவை நமக்கு நண்பன் என்று நினைகிறோமோ அவையே நமக்கு ஆப்பு வைப்பது தான் பரிதாப நிலை .
Google ஐ பயன்படுத்தாத இணைய பாவனையாளர்கள் இல்லை எனலாம் .


Google நிறுவனம் நமக்கு தெரியாமல் நம் தேடல்கள் நாம் செல்லும் தளங்கள் என நமது விபரங்களை நமக்கு தெரியாமலே நமது மின்னஞ்சல் உடன் சேர்ந்த வகையில் சேமித்து வைத்துள்ளது. இதை விட நாம் பார்க்கும் காணொளிகள் பற்றிய விபரம் கூட google இடம் உள்ளது.



ஆனால் இது வரை தன் ஏனைய சேவைகளுடன் தன் ஏனைய பங்காளிகளுடன் பகிர்ந்து கொள்ள வில்லை .ஆனால் இந்த மார்ச் 16 உடன் google இன் இந்த நல்ல மனப்பாங்கு மாற போகிறது .google தன் privacy policy இல் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் இதை சட்ட படி நிறை வேற்ற போகிறது .
இதற்கு முன் எம்மால் எவ்வளவு காத்து கொள்ள முடியுமோ அவ்வளவு நாம் எம்மை காத்து கொள்ளவேண்டும் .
Google செய்ததையும் செய்து விட்டு கொஞ்சம் கருணை காட்டுவதை போல google உம் எமக்கு ஒரு option ஐ போனால் போகட்டும் என்று தந்து இருக்கிறது



அதையும் தான் தெரிந்து வையுங்களேன்

https://www.google.com/history இந்த இணையமுகவரி ஐ உங்கள் இணைய உலாவியில் type செய்யுங்கள் .
அதன் பின் வரும் Google இன் பக்கத்தில் உங்களின் history தகவல்சேமிக்க பட்டுள்ளன என காட்டும் .பார்த்ததும் ஏங்கி விடாதீர்கள் search பெட்டியின் சற்று கீழ் உங்கள் பார்வையை இறக்குங்கள் . remove removeall ஆகிய option கள் காணப்படும் .அதில் remove all ஐ கிளிக் செய்யுங்கள்.அப்பிரம் உங்களுக்கு search history ஐ pause செய்யவா ? என கேட்கும் ?உங்கள் விருப்பத்துக்கு தெரிவு செய்யுங்கள் google உங்கள் தகவல்களை சேமிக்க வேண்டும் என்றால் cancel செய்யுங்கள் அல்லது ok செய்யுங்கள் .இப்போது உங்கள் தரவுகள் சேமிக்க படுவது நிறுத்தப்பட்டு விடும் .

ஆனால் youtube போன்ற தளத்தில் ஏதாவது தேடும் பொது உங்களுக்கு சம்பந்தமான விடயங்கள் வராது இது சிலருக்கு பிரச்சனை தரும் மீண்டும் resume என்பதை கிளிக் செய்யுங்கள் பிரச்சனை தீர்ந்தது. மீண்டும் உங்கள் தரவுகள் google ஆல் சேமிக்க தொடங்க பட்டு விடும் .
முயற்சி செய்து தான் பாருங்களேன்