பல சந்தர்பங்களில் நமக்கு இணையதளங்களை screenshot எடுக்க வேண்டி உள்ளது
!அந்த நேரங்களில் நாம் தேர்ந்தெடுப்பது printscreen option அல்லது sniping
tool .
![]() |
Easy way to get full height screenshot |
ஆனால் இது முழுமையான தீர்வை தருவதில்லை .திரையில் தெரிவதை மட்டுமே எடுக்க முடியும் .முழு நீள இணையதளத்தையும் screenshot எடுக்க முடியாது .
இதற்கான ஒரு தீர்வைதான் இன்றைய பதிவில் பார்க்க போகுறோம் !
இதற்கு நாம் இணையுலாவிகளில் பயன்படுத்தப்படும் நீட்சி(ADDONS -firefox ,Extension -google chrome ) என்னும் செயல் நிரலியை பயன்படுத்தபோகிறோம் .
இதை எப்படி firefox இல் பயன்படுத்துவது என்று பாப்போம் !
இந்த addons பெயர்
Screenshot
1.9.1
இது www.uploadscreenshot.com உடையது .
கீழே உள்ள இணைய முகவரியை சொடுக்குங்கள்.
இங்கே
அதில் addTO Firefox என்பதை சொடுக்குங்கள் .தற்போது உங்கள் fire fox இல் இந்த நீட்சி நிறுவப்பட்டு விடும் !
அதன் பின் Firefox ஐ ஒரு முறை restart செய்யுங்கள்.(ஒருகாய் மூடி திறவுங்கள் ).தற்போது நீட்சி செயற்பட தயார் !
மேலே படத்தில் குறிப்பிட்ட அடையாளம் வந்திருப்பின் நீட்சி செயலில் உள்ளது.
இந்த அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் sreenshot எடுத்து கொள்ளலாம் .
இந்த அடையாளத்தின் அருகில் உள்ள அம்பு குறியை அழுத்துவதன் மூலம் தேவையான விருப்ப தெரிவை செய்யலாம் .
அதிலும் நிரந்தர தெரிவு(screenshot button action) ,நடை முறைக்கான தெரிவு (Do this now-without changing setting)என இரண்டு பிரவு உண்டு !
மேலும் இரண்டு பிரிவிலும் பல் தெரிவு உண்டு
1)திரையில் தெரிவது மட்டும் (capture visible area and..)
2)முழு உயர இணையத்தையும் screen shot எடுப்பது (Capture wholepage and...)
ரெண்டிலும் எடுத்த பிரதியை எங்கு save செய்வது என்று தெரிவு செய்ய முடியும்
- Upload - - >www.uploadscreenshot.com என்ற இணைய தள கணக்கு இருந்தால் தரவேற்றம் செய்யலாம்.
- Copy to clipboard --> எம் தற்காலிக நினைவகத்துக்கு செல்லும் -இதன் பின் paint மென்பொருளை திறந்து அதில் paste செய்தால் போதும்.தேவையான screenshot கிடைத்துவிடும்.
- Upload and copy to clipboard => ரெண்டும்
இனி google chrome இல் எவ்வாறு நிறுவுவது என்று பாப்போம்!
இங்கே கிளிக் செய்யுங்கள் .
இங்கே
ADD TO CHROME என்பதை கிள்சிக் செய்யுங்கள் !
உங்கள் அனுமதியை கேட்கும் Install என்பதை கிளிக் செய்யுங்கள் .
chrome ஐ restart செய்யுங்கள் .
நீட்சி இயங்கிறது என்பதற்கு சாட்சியாய் கீழுள்ளது போல் அடையாளம் காணப்படும்
மற்றதெல்லாம் Firefox போன்றதே !
மேலதிகமாய் ஒரு வசதி chrome இல் உண்டு .paint ஐ திறக்க தேவையில்லை .
குறித்த அடையாளத்துக்கு அருகில் உள்ள சாவி அடையாளத்தை (settings பட்டன்) ஐ கிளிக் செய்யுங்கள் .
manageExtension என்பதை கிளிக் செய்யுங்கள் .
அதில் எமக்கு தேவையான் folderஐ தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின் நாம் எடுக்கும் ஸ்க்ரீன்ஷாட் இந்த folderக்குள் தானே சென்று விடும் .
முயன்று பாருங்கள் !
இரகசியம் -சில இணையங்களில் imageகளை Download செய்ய முடியாமல் இருக்குமே ,அந்த நேரத்தில் இவ்வாறு Screenshot எடுத்து தேவையான image ஐ downloadசெய்யுங்கள்
0 comments:
Post a Comment