Tuesday, August 7, 2012

இடித்துவா ஏழைத்தோழா

மாடிக்கும் மனிதருக்கும் உயரம் கூடிப்போச்சு
மானிடம் மனிதருள் உயிரழந்து மிருகமாச்சு

பணம் குவிந்த குவியலிலேயே  குவியுது
பசி பட்ட வயிற்றிலயே  புசிக்குது மழலை உயிரையும்



தப்பு எங்கு இருக்கு என்று புரியவில்லையே
தப்ப வைக்கும் வழியும் தெரியவில்லையே

 தீர்க்க வரும் கரங்கள் கூட வறண்டு
திராணியற்று வெதும்பும் மனிதருடையதே

கற்க துடிக்கும் கண்ணீர் நனைக்க கல்வியில்லையே
கலகலக்கும் தோள்களில் மூடிக்கிடக்குது புத்தகம்

நீதி கூட நிதியின்  பிடியிலேயிங்கு
நீயும் நானும் ஏதும் செய்யலாம் என்றால்

வழி வரைய நான் தயார் - உணர்ந்தவர்
வழித்துணையாய்  வருவார் நம்முடன்

இருந்தபடி இருந்தால் இருளும் உன்னை கவ்வும்
இடித்துவா ஏழைத்தோழா குட்டுபவனையும்

யாசகம் வேண்டாமே யாரிடமும் -புதிய மார்க்கம்
யாமும் படைப்போமே  உழைப்பாலே

சிந்தித்தால் சிகரமும் சுமக்கலாமே - நீ
சிந்துகிற வியர்வையால் சிதறுமே சில்லறைகள்

தருவதற்கு மாடியும் ஆட்சியும் -கற்பக  தருவல்ல
தானே தானே வளருது பனைகூட உயரத்துக்கு


குடிமூழ்கி கிடக்கையில் வேண்டுமோ -குடி
குடிசைகள் குதுகலித்த பின் குடிக்கலாமே -நல்ல தண்ணி

ஏழையோடு மனிதனாய் பிறந்தது குற்றமன்று -குடிசை மைந்தா
ஏதுமின்றி இருந்து விடாதே இருந்த இடத்திலேயே

0 comments:

Post a Comment