வருவதாய் இருந்து அதற்கு அனுமதி கிடைக்காததால் மிரட்டல் என்ற பெயரில் திரை வந்து சேர்ந்து இருக்கு
இயக்குனர் மாதேஷ்(ஏற்கனவே மதுர, அரசாங்கம் எண்ட படங்களை இயக்கி இருந்தார் ) இயக்கத்தில் வெளிவந்து லாஜிக் கெல்லாம் கேட்ககூடாது என்று மிரட்டிய படி சுமாராய் ஒட்டப்பட்டு கொண்டு இருக்கும் படம் எனலாம் .
ஏமாற்றம் இல்லாமல் குடும்பத்தோடு சிரித்து விட்டு வரலாம் அடித்து பிடித்து டிக்கெட் எடுக்காமலே !
புதிதாய் அறிமுகமாகி இருக்கிறார் ஷர்மிலா மந்த்ரே(Sharmila mandre).என்னமோ பெரிய அழகு இல்லை என ரசிகர் வட்டத்தில் பேச்சு !ஆனாலும் மூன்னு சுருதி காஷன் அளவுக்கு கேவலம் இல்லை !பாடல்களிலும் சரி திரை முழுக்கவும் கவர்ச்சி என்பதை துளியளவும் காட்டவில்லை இந்த புதுவரவு நடிகை!
அதனால் தான் என்னவோ அழகாய் இல்லை அம்சமாய் இல்லை என்ற குற்ற சாட்டு !ஆனால் மடத்தின் அடுத்த முடிவு எப்பிடி அமைய போகிறது தெரியவில்லை !சில இடங்களில் இவரை ரசிக்கலாம் ஒரு இடத்தில் வினய் ஒளிந்திருந்து சைட் அடிப்பார் அந்த இடத்தில கீரோயின் போடும் ஆட்டம் ,அப்பப்ப ஓர கண்ணால் பார்க்கும் போது என ஒரு சில ஸ்டில்களில் அவர் அழகாய் தான் தெரிகிறார் !
மற்றும் படி நடிப்பில் இவர் தமிழுக்கு புதுசு என்றதுக்கு எந்த சாட்சியும் இல்லை !நடனமும் பரவாயில்லை!
அடுத்து நம்ம வினய்.இவருக்கு அறிமுகம் தேவையில்ல பழகிப்போன முகம் தான்!ரொம்பதான் படம் முழுக்க மாத்தி யோசிக்கிறார் இவர்!வழமையா பஞ்ச் டயலாக் ,பைட்டு , சேசிங் எண்டு செய்தாதான் ஹீரோ என்ர பிலோசபி இங்க பிரேக் ஆகுது !புத்தியால பூப்பரிகிறார் வினை -நம்ம ஷர்மிளாவ-சாரி வினையோட ஷர்மிளாவ .சந்தானதொடு காமெடி அசத்தி இருக்கிறார் !வழைமையாய் ஒரு டயலாக் சொல்லி விடு முகத்தையும் உதட்டையும் கொஞ்ச நேரம் அப்படியே வைத்திருப்பார் வினை .ஆனால் இந்த படத்தில் அந்த டைம் கேப் ஐ குறைத்திருக்கிறார் !
டம்மியாய் முடங்கி கிடக்கும் மன்சூர் அலியிடம் நிறைய நேரம் காமடிக்கு மினக்கட்டு இருக்கிறார்!நல்லவே வந்துள்ளது !
பாவம் மன்சூர் அலி எப்பிடி இருந்தவர் இப்பிடி ஆகிட்டார் !
சந்தானம் ,கச்சா கருப்பு ,வினை 3 comedians of movie எனலாம் சந்தானத்தை மாட்டி விட்டு கஞ்சா கருப்பிடம் காமடியாய் மோதியிருக்கிறார் வினய்!
அட கதை என்ன எண்டு கேட்கிறீங்களா!கொஞ்சம் வித்தியாசம் தான் ,கொலை கடத்தல் என தாதாவாகிருகிறார் பிரபு சங்கர் தாதா என்ற பெயரில் !இவருக்கு ஒரு எதிரி !பிரபுவிடம் வேலை பாக்கும் ஒருவரை யும் அவன் மனைவியையும் கொன்றுவிட பிரபுவுக்கும் அவருக்கும் தொடங்குது பகை !
எதிரியின் மகனை கொள்கிறார் பிரபு !இதனால் கோபபடுற வில்லன் வழமைக்கு மாறாய் விறகு கொத்தி கொண்டே சொல்கிறார் எனக்கு பிரபுவோட உயிர் வேண்டாம் .எண்டு ..பிரபு வின் தங்கை சாவு தான் வேண்டும் என்றார் !

இத தெரின்சுகிற பிரபு தானும் தன் பாடும் எண்டு லண்டன்ல படிசுகிட்டு இருக்கிற ஹீரோயின தன் தங்கையை தானே இந்தியாக்கு கடத்திட்டு வாராரு !
ஆனாலும் இந்த கடத்தல் காட்சிகள் ,லண்டன் வீதிகளில் வாகனங்கள் ,அது திரைக்கு எடுக்க பட்ட விதம் எதோ பெரிய ஒரு டான் படம் அளவுக்கு அமைத்திருகிறார்கள் .இந்த காட்சிகள் ரொம்ப ஓவர் !இதை பார்த்து பெரிய த்ரிலிங் இருக்கும் எண்டு ஏமாந்திராதிங்க!
இந்த நேரத்தில தன் பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து நல்லது பண்றன் எண்டு அட்டகாசம் பண்ணும் வினய், முழிக்கும் பண்டியராஜும் அறிமுகமாகிறார்கள் !தன் மகனை பிரபுவின் ரெட் மணி(red money) என்னுர வேலைக்கு சேர்த்து விடுறார் !
அப்புறம் ஏன் சேர்த்து விட்டம் எண்டு வேதனை படுவது வேற கதை !
அங்கே பிரபுவின் தங்கைக்கும் கதாநாயகனுக்கும் காதல் பத்திகொள்கிறது !
பிரபுவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் !இது பிரபுவுக்கு தெரிகிறதா இல்லையா ?வில்லன் ஹீரோயினை கொல்றாரா ?இடையில பிரபு வரவழைக்கும் அமெரிக்க மாப்பிள்ளை ,இதெல்லாம் ஹீரோவும் ஹீரோயின்னும் எப்பிடி சமாளிக்கிறாங்க எண்டது தான் கதையே !
மிச்சத்தை தியட்டருல பாருங்க!
m good review
ReplyDeletePlease remove the word verification
ReplyDeleteவிமர்சனம் மிகவும் அருமை இது போன்ற சினிமா விமர்சனத்தை வீடியோவுடன் காண http://www.valaitamil.com/movie-review-subcategory15-30-0.html
ReplyDelete