என்னடா எப்பவோ வந்த படத்துக்கு இப்ப கற்பூரம் காட்டி பூச போடுறாய் ? எண்டு கேட்கிறது விளங்குதுங்க!இவ்வளவு காலமாய் இந்த படத்தை பார்க்க தவறி விட்டேன் !ரெண்டு தினங்களுக்கு முன் தான் ரசித்து பார்க்கும் படி நேரம் கூடி வத்திச்சு!(24 மணிநேரமும் நாங்க வெட்டி ஆபீஸ் வேலைங்க).கொஞ்சம் நாளாச்சு என்றதால் காமெடி ,பாடல் காணொளிகளையும் இணைக்கலாம் என்றதாலும் தான் இவ்வளவு லேட்டா எழுதிறன் !
சரி வாங்க படத்தை பற்றி பார்ப்பம் !சத்தமே இல்லாம வந்திருக்கு இந்த அழகான பறவை கூடவே கேரளாவலிருந்து தமிழ் சினிமாக்கு ஆத்மியா என்ற பறவையையும் கூட்டி கொண்டு!சிவ கார்த்திகேயனைஹீரோவாய்
காட்டுவதா?அல்லது காமெடியன் ஆக காட்டுவதா ?என நிறைய இடத்தில் குழம்பி இருகிறார் இயக்குனர் !
கதை வழமையான சாயல் தான். ஆனால் கொஞ்சம் எதிர்பார்ப்பை கூட்டி வித்தியாசமாக சிறகடித்திருகிறது இயக்குனரின் பார்வை !சபாஸ் சொல்லலாம் !
சில இடங்களின் ஆத்மியாவின் முகத்தின் காதலே இல்லாத வெறுமை அழகு ,சிவகார்த்திகேயனின் ஹீரோசம் இல்லாத முகம் ரெண்டும் சிறகுளை சுமையாக்கி சலிப்பை ஏட்படுத்துகிறது !
கதையை சுருக்கமாய் பார்ப்பம்
ஆத்மியா சிவகார்த்திகேயனும் சிறு வயதில் இருந்து பழகுகிறார்கள் !எதோ ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆத்மியாமேல காதல் வருகிறது !
ஆத்மியா தாய் இல்லாத பொண்ணு !இவரின் தகப்பன்,தமையன் மார் கொஞ்சம் முரட்டு தனமான குடும்பம் !ஆத்மியா போடும் கோலத்தை கார்த்திகேயன் ரசிக்கையில் வேலிச்சண்டைக்கு போகவரும் தமயனின் TVS அதை தட்டி விடும் போதே கார்த்திகேயன் கனவு கலைகிறது தொண்டையில் எச்சில் உருள்கிறது!
கொஞ்சம் அல்ல ரொம்பவே பயந்த கேரக்டர் நம்ம கீரோ! சில வேலை ZERO. !கதா நாயகி காதலிப்பதாய் படத்தின் முதல் பாதியில் எந்த தடயமும் இல்லை !
ஆனால் தன்னிடம் காதல் மழையை பொழிவதாய் தன் நண்பர்களிடம் பொய்களை மலையாய் அள்ளி குவிக்கிறார் !
அதை நம்பி நண்பனுக்காய் எதையும் செய்வேன் என்னும் "பராட்ட சூரியின்" நட்பு நிஜ நண்பர்களின் நட்பை திரையிட்டு காட்டியிருக்குது !கூடவே சிரிக்கவும் வைத்திருக்கு !
இந்த நிலையில் ஆத்மியாவுக்கு அவங்க வீட்டில நிச்சயார்த்தம் நடக்குது !அதுவும் அவளுக்கு கேட்காமலே!இந்த நிலையிலும் கூட கதாநாயகிக்கு காதல் இருப்பதாய் படத்தில் காட்டவேஇல்லை!
நிச்சயதார்த்தத்தில் கார்த்தி முகத்தை ஒருவாட்டி பார்பார் "இப்ப ஆச்சும் சொல்லேண்ட என்ற மாறி".
கோவிலில் வைத்து "என்னை கட்டிகிறீயா?" என சிவகார்த்திகேயன் கேட்க கையை ரொம்பவே கஷ்டப்பட்டு எடுத்து
"டேய் நான் நிச்சையமான பொண்ணு ,இப்ப வந்து சொல்றா?" - (நேரத்தோட சொல்ல என்ன உனக்கு?) என சொல்லும் இடங்களில் மட்டும் காதலிக்கிறாரோ என சந்தேகம் வரும் ?
இந்த இடத்தில் தான் சிவ கார்த்திகேயனின் வெளியூர் நண்பர் கூட்டம் வந்தது சேருது ஊருக்கு!
சூரியின் நட்பு இவங்க காதல பில்ட் அப் பண்றார்!கல்யாணம் அண்டு பொன்னையும் கூடவே மப்பில இருக்கும் மாப்பிள்ளை சிவகார்த்திகேயனையும் சேர்த்து சுமோவில கடத்துறாங்க !பின்னர் லவ் ஐ கீரோயின் சொல்லவே இல்லை என ஆத்மியா சொல்ல சிவாவும் தான் சொன்ன பொய்களை எல்லாம் ஒத்துகொள்ள நண்பர் கூட்டம் ஏங்குகிறது !
சிங்கபுலி கூட்டம் அண்ணன் மாரிடம் சிக்க ,சிவகார்த்திகேயன் ஆத்மியாவுடன் கேரளா நண்பருடன் கேரளாவுக்கு பக் அப் ஆகிறார் பயத்தால !அங்கே தாத்தாவாய் வரும் கேரளா மூர்த்தியின் காமடிகள் சிரிக்க வைத்திருக்கு !காதலர்கள் ஆகாமல் ஒரே ரூமுக்குல் வாழ்கை மனம்கொத்தி பறவையின் சுவாரஸ்யமான நொடிகள் !
கேரளா கோவிலில் அசல் கேரளா பொன்னாக மாறி இருக்கிறார் ஆத்மியா!
பின்னர் வேறு வழியில்லாம் தான் ஒளித்து வைத்த காதலை அம்மா செண்டிமெண்ட் உடன் சொல்ற விதம் ரசிக்கும் படியாய் இருக்கு !
பின்னர் அண்ணன் மாரிடம் மாட்டுகிறது இந்த காதல் சோடிப்பறவைகள் !
சிவ கார்த்திகேயனை பிடித்து வைத்து அடிகிறார்கள் !வேறு வழியில்லாமல் கைகூப்பி போ என ஆத்மியா சிவாவிடம் கேட்க ,பிரிகிறது இந்த சோடிக்கிளிகள்!
பின்னர் 2 வருடம் கழித்து இருவரும் சந்திகிறார்கள் அதுவும் ஆத்மியா வீட்ட!
"உன்னை மன்னிக்கிற பெருந்தன்மை இல்ல கண்ணில படாத இடத்துக்கு போ "
கொஞ்சம் கேப் விட்டு
"போறப்ப இவளையும் கூட்டி போ என ஆத்மியாவ தள்ளி விடுற காட்சி "
எதிர்பார்க்காத காட்சி எனலாம்.
எழில் தன் இயக்கத்தில் ரசிக்க கூடிய ஒரு கதையை திரையிட்டு இருக்கிறார்.சிவகார்த்திகேயன் ,ஆத்மியா கொஞ்சம் நடிப்பில் முன்னேற வேண்டும் .
நடன காட்சிகள் குறைவு என்றாலும் பாடல்கள் ஜதார்த்த காதலர்களின் டூயட் என்று சொல்லற அளவுக்கு நல்லா இருக்கு!
மனம் கொத்தி பறவை பார்பவர்கள் மனதையும் இதமாய் கொத்தியிருகிறது !
இன்னொரு முறை இந்த பறவைகளை திரையரங்குக்கு போய் பார்த்து வாங்களேன்!
எங்க வெளிகிட்டீங்க ?
தியட்டருக்கா ?,CD கடைக்கா?
இல்லாட்டி "போடா நீயும் உண்ட விமர்சனமும் எண்டா?"அத கொஞ்சம் கமெண்ட் ல போடுங்க ?
0 comments:
Post a Comment