Friday, August 31, 2012

பௌர்ணமியோரம்

அலை கூட நரைத்து கொண்டது
உன் பார்வை பட்டு
அழகான பௌர்ணமியன்று -நிலா
நீ கடல் மேல் புன்னகைத்த போது

மணல் மேல் மலை செய்து கொண்டே
மேடு பள்ளம் ரசிக்கிறேன் வதனத்தில்
மணல் கூட நறு மணக்குதே -மண்மீது
நீ மோகப்புன்னகை காட்டியதால்

என்ன கோபம் மறைந்து கொள்கிறாய்
கருந்திரை பின்னே திடீரென
என்ன தொரு வெண்மை என -நான்
மயங்க மறுத்ததை மதியிட்கு சொல்லவோ

பேசி கொண்டேயிருகிறேன் -உன்னோடு நான்
என்னையும் பொழுதையும் மறந்து
போய்கொண்டே இருகிறாய் உச்சிக்கே
கண்ணயர மறுக்கிறது -இம்மாதமும்
எனை ஏமாற்றி போவதை எண்ணி !

0 comments:

Post a Comment