Tuesday, August 7, 2012

உன்னோடு நான்


உன் கண்ணிமை கருமை
என் கனவில்  வரும் வெளிச்சமது

உன் ஓர விழி  பார்வை
என் பாலைவனத்து சூரியகாந்தியது 

உன் உரக்க தெரியா வார்த்தைகள்
என் வாழ்கையின்  தொடர் சங்கீத பல்லவி ஆனது

உன் கூட நான் நடக்கும் தருணங்கள்
என் நடப்பு பயணத்தின் மறக்காத தடயமது

உன் செவியோர ஒற்றை முடி
என் நினைவுகளை உன்னருகி இழுக்கும்  வடமானது

உன் நிஜமான அக்கறை -கறைபட்ட
என் நிஜ வாழ்வையே  வெளுத்தது

உன் காதலோடு நானும்
என் கரிசனையோடு நீயுமே -நான் வேண்டுவது


0 comments:

Post a Comment