Saturday, May 21, 2011

finger print scanner திருடலாமா ?சாத்தியமா?

please click on and shre on facebook
உலகின் தொழில்நுட்பம் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிக்கொண்டு இருக்கிறது .நேற்று கண்ட காட்சி இன்று பழமையை தோன்றுகிறது இதன் வேகம் கண்ணிமைக்கும் பொழுது என்று கூறுவது கூட பொருந்துமா? என்பது கூட சந்தேகம் தான்..................



இரும்பு கதவுகளை போட்டு காவலுக்கு காவலனை நிறுத்தி காவல் காத்த மனித குலம் இன்று கண்ணாடி கதவை போட்டு விட்டு நவீன கருவிய பொருத்தி விட்டு உறங்கும் காலம் ஆகி விட்டது .இப்படி தான் பாதுகாப்புக்கு திறப்பு ,கடவுச்சொல்,plastic அடையாள அட்டை என அறிவியல் உலகத்தின் ஒரு படி தான் கைவிரல் அடையாள கருவிகள் .(finger print scanners).










இந்த கருவியின் அடிப்படை என்ன ,எப்படி இயங்குகிறது ?,இதன் பாதுகாப்பு தன்மை என்ன ?,இது எவ்வாறு திருடப்படலாம் ? என்று தான் இந்த கட்டுரை ஆய்கிறது .
முதலில் கைரேகையின் அடிப்படை என்ன என தெரிந்துகொள்வோம் .கை விரல் ரேகையை பார்த்தோமானால் அதில் மேடான கோடுகள் ,பள்ளங்கள் என இரண்டு விடயங்கள் இருகின்றன .மேடுகள் - rides , பள்ளங்கள் - valleys .

இந்த இரெண்டும் தான் கை ரேகைகளை வேறுபடுத்தும் அடையாளங்கள் .எப்படி கை ரேகை கல் ஒருத்துக்கொருத்தர் வேறுபடுகிறது .இதனை தீர்மானிப்பது மரபணுக்கள். ஆனால் தனியே மரபணுக்கள் தீர்மானிகிறது என்றால் இரத்த உறவுகளின் கை ரேகைகள் ஒன்றாக அமைய வேண்டுமே?ஆனால் அது தான் இல்லை மரபணு மாத்திரமன்றி இன்னும் பல காரணிகளும் இதை தீர்மானிகிறது .எம் கைரேகை முதல் ஆரம்பம் கருப்பையில் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் மரபணுவுடன் எதேட்சயான ஒரு மாறும் கணியம் சேர்ந்து கைரேகை காண அடிப்படை இடப்படுகிறது .இது கைரேகைகள் உறவினர் களிடையே ஒத்திருப்பதை தவிர்கிறது .சிசு கருப்பையில் இருக்கும் போது சிசுவை சூழ amniotic என்ற திரவம் காணப்படும் இது கைரேகையை அடுத்த படியாக தீர்மானிகிறது .இந்த திரவத்தின் சேர்மான விகிதங்கள் ஒவ்வொரு தாய்க்கும் வேறுபடுகிறது .இதை விட ஒவ்வொரு பிரசவத்தின் போதும் வேறுபடுகிறது .இதை விட கற்ப காலத்தில் உள்ள புற சூழலின் காரணமாகவும் இத்திரவம் மாறுபடும்(மலை சூழல்,கோடை ).சிசுவின் கைரேகை உருவாகும் கணிப்பு நடை பெரும் சூழலில் உள்ள திரவ விகிதாசாரம் ,அடர்த்தி என்பனவும் கைரேகையின் அமைப்பை தீர்மானிக்கும் .ஆக மொத்தத்தில் ஒரேபோல கைரேகை உருவாவது சாத்தியம் இல்லை என்பது மாத்திரம் உண்மை என உங்களுக்கு புரிந்திருக்கும் . சரி இனி கருவியின் செயற்பாட்டை பார்ப்போம்.











இரண்டு வகை கருவிகள் இருகின்றன ஒன்று optical finger print scanner (ஒளியியல் கைரேகை ஆய்கருவி ). மற்றது capacitance fingerprint scanner
இரெண்டும் முதலில் வைக்கப்படும் கைரேகையின் அமைப்பை பெற்று கொள்ளும் பின் ஏற்கனவே குறித்த கருவியில் சேமிக்க பட்டுள்ள மாதிரி களுடன் பொருந்துகிறதா என ஒப்பிட்டு பார்க்கும் .ஆனால் இவை வைக்கப்படும் கை ரேகையின் மாதிரியை பெற பயன் படுத்தும் முறைகள் தான் முக்கியமானவை .
optical finger print scanner

ஒளியியல் கருவி எப்படி செயற்படுகிறது என பார்ப்போம் . இது தரமான led வகை மின்குமிழ் மூலம் முதலில் கைவிரலை நோக்கி ஒளியை செலுத்தும் .பின்னர் கை விரலில் பட்டு தெறிக்கும் ஒளியை photon diodes (ஒளிக் கேற்றப மாறும் தடையி ) மூலம் உருவாக்க பட்ட charge coupled device (CCD) மூலம் ஒளியியல் படம் ஆக பெற்று கொள்ளும் .அதிக ஒளி தெறித்த பகுதி இருண்டபிரதேசமாயும் (மேடு)குறைந்த ஒளி தெறித்த பகுதி பிரகாசம் குறைந்த பகுதியாகவும்(பள்ளம் ) படத்தில் அமையும் .
 .............................................................................................................................................................
இவ்வாறு பெற்ற கைவிரல் அடையாளத்தை darkness தரம் சரியாக உள்ளதா என சரிபார்க்கும் .இது சரியாக இல்லாவிடின் மறுபடியும் தன் ஒளியின் அளவு scan செய்ய எடுக்கும் நேரத்தை மாற்றி மீண்டும் பிரதி எடுக்கும் .

darkness சரியாக அமைந்து விட்டால் image defination ஐ சரிபார்க்கும் (அதாவது pixel) .இதற்கு கிடையாகவும் நிலைக்குத்தாகவும் ஒளியியல் கோடுகளை ஓட விடும் (நகர்த்தும் என்று கூறலாம் ).இதன் பின் மாதிரிக்கு செங்குத்தாக ஒளியில் கொடு செலுத்த பட்ட சரிபார்க்கப்படும் .இந்த சரிபார்ப்புகள் சாதகமாக இருந்தால் எடுக்கப்பட்ட பிரதி ஒப்பீடு செயற்பாட்டுக்கு அனுப்பப்படும் இதன் பாதகம் என்ன என்றால் ஒருகைவிரல் போன்ற பிரதியை செலோபேன் கடதாசி .ஒரு ரக பொடி கொண்டு உருவாக்கி விடலாம் .அந்த கடதாசியை உணரியில் வைத்தால் திறந்திடும் பாதுகாப்பு கவசம் .


capacitance fingerprint scanner


இது மின்னியல் அடிப்படையில் இயங்குகிறது .மேலே கூறிய கருவியை விட சிறந்த ஒன்று .
இதன் தத்துவம் கொள்ளலவிகளை (capaciters ) அடிப்படையாக கொண்டது .கொள்ளவிகளின் இரு தகடுகளுக்குமான அழுத்த வேறுபாடு அத் தகடுகளுக்காண இடைவெளியில் தங்கியுள்ளது .இதனையே இக்கருவியும் பயன் படுத்துகிறது .நாம் கைவிரலை வைக்கும் மேற்பரப்பு பல சதுரங்களாக (cells) பிரிக்க பட்டு இருக்கும் .இது எம் ரேகையி அகலத்தை விட சிறிய சதுரம் .
இந்த cells ஒவ்வொன்றும் சிறு கடத்தும் தன்மை உள்ள தகட்டை கொண்டு இருக்கும் .இது கொள்ளலவியின் ஒரு தகடாகவும் எம் கை மற்றைய தகடாகவும் அமையும் .மேடுக்கும் தகட்டுக்கும் இடையான தூரம் குறைவு. பள்ளத்துக்கும் தகட்டுக்குமான தூரம் அதிகம் .இது வேறுபட்ட மின் அழுத்த வேறுபாடுகளை உருவாக்கும் இதன் அடிப்படையில் ரேகை அமைப்பின் விம்பத்தை கருவி பெற்று கொள்ளும் .இதில் மேலும் அனுகூலம் மேடு பள்ளங்களின் உயரங்களை கூட கருவி பெற்று கொள்ளும் .
பின் தன்னிடம உள்ள பழைய மாதிரிகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் .
இதை மற்றைய கருவி யை போல ஏமாற்ற முடியாது என்றாலும் இதை ஏமாற்ற ஒரு வழி இருக்கிறது .கை ரேகை களின் முப் பரிமாண அச்சுகளை (moulds ) உருவாக்கி ஏமாற்றலாம் .ஏன் சிலவேளை ஒருத்தரின் விரலை வெட்டி கூட பயன் படுத்தலாம் .
இந்த இரண்டு பிரட்சனைக்கும் தீர்வாக நவீன capacitancescanners இல் விரல் நாடி துடிப்பையும் வெப்பத்தையும் சரிபார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டது .இதற்கு jelattin என்ற பதார்த்தத்தில் தயாரிக்கப்பட்ட போலி ரேகை உரையை எம் விரலில் ஒட்டி ஏமாற்றிவிடலாம் ........



இந்த எல்லா முறைக்கும் உண்மை யான வரின் கைவிரலை ஒருமுறை நெருங்க வேண்டும் .ஆனால் கணணி வலை அமைப்பில் தேர்சி பெற்ற ஒருவருக்கு இதெல்லாம் அவசியம் இல்லை .நேரடியாக கருவியின் தரவு தளத்துக்கு சென்று தன் ஒப்பிடு பார்க்க பட்ட தாக பொய் தகவலை கருவிக்கு வழங்கி விட்டால் போதும் நுட்பத்தின் மர்ம குகை திறந்து விடும் .அந்நாள் இவ்வாறு செய்பவர் தரவு தளத்தில்தன் கைரேகை பதிவை சேர்த்து விட்டு தன் விரலை கருவி மீது வைத்து திறக்கலாம் .ஆனால் அவரின் கை ரேகை காவல் துறை கைவசம் சென்று விடும் ..

0 comments:

Post a Comment