எட்டு திசையிலும் உள்ள சினிமா ரசிகர்களின் ஆறறிவுக்கு அப்பால் தற்போது சூரியாவின் 7 ஆம் அறிவு பட்டையை கிளப்பை கொண்டு இருக்கிறது.
7ஆம் அறிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இப்படம் 25 திரையரங்குகளில் வெளியாகிறது.
தீபாவளிக்கு விஜய்யின் வேலாயும் உள்பட பல படங்கள் வந்தாலும் எதிர்பார்ப்பு 7 ஆம் அறிவுக்குதான். சூர்யா படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 25 திரையரங்குகள். ஒரே காம்ப்ளக்ஸில் உள்ள பல திரையரங்குகளில் வெளியிடுவதையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை நாற்பதை தொடுகிறது.
இந்த அதிக திரையரங்கு காரணமாக மங்காத்தாவின் ஓபனிங் வசூலை 7 ஆம் அறிவு சாதாரணமாக கடக்கும் வாய்ப்புள்ளது.
தமிழில் வெளியாகும் அதே நாள் 7ஆம் அறிவு தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்குப் படத்துக்கு செவன்த் சென்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
சூர்யா, முருகதாஸ் கூட்டணி என்பதால் நேரடி தெலுங்குப் படத்திற்குள்ள எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்கும் உள்ளது. மேலும் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
சமீபத்தில் ரசி. கே சந்திரனை சந்தித்த அமீர்கான் 7ஆம் அறிவு குறித்தும் சூர்யாவின் ரோல் குறித்தும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். அவரது கருத்துப்படி 7ஆம் அறிவை இந்தியில் ரீமேக் செய்ய அமீர்கான் ஆர்வமாக உள்ளார்.
புத்த பிக்குவைப்போலிருக்கும் சூர்யா தற்காப்பு கலைஞனைப் போல் உடம்பு முறுக்கி நிற்கும் புகைப்படங்கள் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.
சீனாவில் பிரபலமாக இருக்கும் தற்காப்புக் கலை அவர்களுடையது அல்ல, புத்த பிக்குகள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு கொண்டு சென்றது... இதுவே 7ஆம் அறிவு படத்தின் கதை என்று கூறப்படுகிறது. புத்த பிக்கு, சர்க்கஸ் சாகஸக்காரர், விஞ்ஞானி என சூர்யாவுக்கு இதில் பல்வேறு வேடங்கள். புத்த பிக்கு கதாபாத்திரம் படத்தில் சிறிது நேரமே வருகிறது.
ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.தீபாவளிக்கு 7ஆம் அறிவு திரைக்கு வருகிறது.
Friday, September 30, 2011
7 ஆம் அறிவு Trailor ,audio launch
5:50 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment