Friday, August 31, 2012

தடமாறல்கள்-காதல் தொடர் கதை

அவசரமாய்  வாகனங்கள் அசுர வேகத்தில்  செல்லும் ஒரு  தெரு !தன் டெனிமினை சற்று மடித்து உயர்த்திய படி மஞ்சள் கோட்டை கடக்கிறான் ஒரு இளைனன்  .
 

மஞ்சள் சாயம் ஒட்டி விடும் என்பதற்காய் அல்ல தேங்கிய மழை தண்ணி நாளைக்கும்போட வேண்டிய டெனிமினை நாசமாக்கி விடும் என்பதற்காய்.கடந்ததும்  அவன் கவனம் செல்பேசி திரையினை தொடுகிறது!செல்பேசியையும் சந்தியருகு பஸ் Halt டையும் சல்லடை
போட்டு தேடின சனுஜனின் கண்கள்.


 


அவன் அந்த ஹல்ட்டுக்கு  வரவும் வந்த 100 ஆம் நம்பர் பஸ்ஸில் அனுசா இறங்கவும் சரியாய் இருந்தது!
யாருக்கும் தெரியாமல் இருவர்
மௌனமும்  எதோ வார்த்தைகளை பரிமாறி கொள்கின்றன!எதோ பல நாள் தொலைந்து போனது  கதைக்க தொடக்கி விடுகிறாள்  அனுசா!அனுசா திருகோணமலை ஐ சேர்ந்த பொண்ணு உயர் கல்விக்காய் கொழும்பில் உள்ள பல்கலை கழகம் ஒன்றில்  படிக்கிறாள்  .சனுஜன்  தனியார் தனியார் கற்கை  நிலையத்தில் தொலைதொடப்பு பொறியியல்(hnd) படித்து விட்டு எடிசலட் என்ற நிறுவனத்தில் பயில் நிலை தொழில் நுட்பவியளாலனாய்
பனி புரிகிறான்.இவனும்  திருகோணமலை தான் ஆனால் சின்ன வயதிலேயே மட்டக்களப்புக்கு சென்று விட்டனர்!
 

கடந்த 1 வருடமாய் அனுசாவும் ,சனுஜனும் இரு தலைகளாய்
மனமொன்றி காதலிகிறார்கள்.என்ன தான் இவர்கள் விடியும் வரைக்கும் SMS போட்டு கொண்டாலும் ,சந்திக்காமல் இருந்து விட்டால் ஏதொ வேறு கிரகத்தில் இறக்கி  விட்டது போல் ஒரு கொடுமை!அப்படி ஒரு பிரிவுக்குள்  தான் இவர்களை தள்ளி விட்டு இருந்து சூழ் நிலை !

நான்கு மாதங்களுக்கு முன் "நான் ஊருக்கு போறான்,இப்போதைக்கு இந்த ஸ்டைக்   (strike)   முடியாதாம் ,அம்மா வர சொல்லிட்டா, I mess u Later,Miss u daa"  என்ற குறும்  செய்தி சனுஜனின் மொபைல் இக்கு வரவே அவன் முகமும் குறுகிவிட்டது !



நான்கு மாதத்தின் பின் தான் இருவரும் நேற்று சந்தித்தனர் !ஆனால் நேற்றைய நாள் போதவில்லை அவர்களுக்கு, அவர்கள் சொற்களை பரிமாறி கொள்ள .....அது தான் இன்ற சந்திப்பு....இந்த நான்கு மாதங்கள் சனுஜன் படாத பாடு !நல்லாய் தேய்ந்து விட்டது இருவர் கைபேசி சாவிகலெல்லாம்!இந்த SMS களை பார்த்து கொண்டே சாய்ந்து விடுவான் ஒரு புறம் அலுப்பு ,மறு புறம் பிரிவு,அப்பப்ப  வீட்டில இருந்து வரும் போன்  "தமிபி  எப்பிடி அப்பு இருக்கா" "இஞ்ச கொஞ்சம் அப்பிடி "-
                                                       -இதெல்லாம் மீறியும் அனுசாவை சந்தித்த நினைவுகள் அவன் கனவில் வந்து போகும் அவன் தூங்காமலே !....அழகா சந்திப்புகள் தான் ,எதிர்பாரா பரிமாறல்கள் ,...அப்பிடி இன்ன தான் வித்தியாசமாய் காதலிக்கும்  போது வந்திடிது மனசுக்கு ???, அவனுக்கு பதில் தெரியாது  ,ஆனால் ஏதொ வித்தியாசம் காதல் கொண்டு வந்து விடுகிராது தான் 


அடுத்த வாரம் தொடரும்

0 comments:

Post a Comment