Friday, September 21, 2012

300-500 மில்லியன் கொலைகள் செய்த உலகின் கொலையாளி !



ஏதோ படுகொலை பற்றி இருக்கும் என நினைத்து  விடாதீர்கள்   இது உறங்கிக்கொண்டு   அவ்வப்போது படை எடுக்கும்  ஒரு நோயை பற்றிய சிறு அறிமுகம் !அது தாங்க சின்ன அம்மை !(smallpox ).

SmallPox
Small Pox -The Greatest Killer



இந்த நோயை பொறுத்தவரை தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்திவிட்டோம்   என்று மனித இனம் மார் தட்டி கொள்வது ,பூனை கண்ணை மூடி பால் குடிக்கிறதை போன்றது ,இது எப்போது வேண்டுமென்றாலும் விழித்து
கொள்ள கூடிய ஒரு நோய் என்பது தான் உண்மை !

கொஞ்சம் பொறுங்க,ஏழாம் அறிவு பற்றி ஜோசிக்க தொடக்கி விடாதீர்கள் !அங்கு இது போன்ற ஒரு நோய் தானே விழித்து
கொள்ள வில்லை ,சினிமாக்காய்
விழிக்க  வைகிறார்கள் !அந்த கதையின் உண்மை தன்மை  பற்றி நான் இங்கு ஆராயவில்லை !
                        "புதுசு புதுசா நோயெல்லாம் வருது"
பொதுவாக மக்கள் இந்த வார்த்தையை கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் !
  • இதன்  நிஜ தன்மை என்ன ?
  • உண்மையில்   புதிதாய் நோய்கள் வருகிறதா ?
அல்லது
  • நாம் இன்று காணும் நோய்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததா?
கொஞ்சம் ஆராய்ந்து பாப்போம் ?




இவ்வாறான நோய்கள் தன இயல்பை மாறிக்கொண்டு புதிய ரூபத்தில் விகாரமடைந்து  பிரபல்யமாய் மாறுகிறதே தவிர புதிதாய் உருவாகிறது என்பது தவறு !


அதற்கு சான்று தான் இந்த சின்னம்மை ! கி .மு 1500  களில் சின்னைம்மை வந்திருப்பது  நிருபனமாய் இருக்கிறது .இந்த  முடிவை எடுக்க மம்மிகள் உதவி செய்திருக்கிறது .


மம்மிகள் -இறந்தவர் உடலை   உரிய திராவகங்கள் பயன்படுத்தி பல நூறு ஆண்டுகள் பேன எகிப்து தேசம் பயன்படுத்திய முறைமைதான் இந்த மம்மிகள் !

தாழிகள் - இறந்தவர் உடல்கள் பெரிய மண்பாண்டங்களில் அடைத்து புதைத்த இந்திய பிரதேச நடைமுறை

இந்த  ரெண்டுக்கும் ஒரு வித்தியாசம்  இருக்கு .மம்மிகளின் முறைமை உடலின் மேல்பரப்பு  மென் தோல்கூட பழுதடையாத படி கைக்கொள்ள பட்டு இருக்கிறது .இந்த தன்மை தான் அக்கால சின்னம்மை பற்றிய தகவல்களை பெற உதவி இருக்கிறது !
Sir Marc Armand Ruffer இந்த மம்மிகள் பற்றி 60 ஆண்டுகளுக்கு  முன் ஆய்வு செய்து எகிப்திய நாகரிகத்திலும்  இந்த நோய் இருந்திருகிறது என்ற உண்மையை நிருபித்து இருக்கிறார்.
அவரின் ஆய்வு படி
  • மிக பழமையான கி.பி 1500  காலத்தை சேர்ந்த மம்மி
  • மிக  சமீப மம்மி என கருத கூடிய கி.பி 1157 ஐ சேர்ந்த மம்மி
ஆகிய ரெண்டிலும் இதற்கான தடயங்களை கண்டு  அறிந்து உள்ளார் !ரெண்டு தொடக்கம் நாலு மில்லிமீட்டர் விட்டம் கொண்டதாக இந்த கொப்புளங்கள் காணப்பட்டு இருகின்றன !
இதை இந்த கொப்புளங்கள் மட்டுமல்ல.அந்த தோலில்
உறங்கு நிலைக்கு  போன  வைரஸ்கள் கூட அறிவியல் அடிப்படையில் சான்று பகர்ந்து இருக்கிறது !

நீங்கள் நினைப்பது சரிதான் ,இவ்வாறான வைரஸ் அல்லது அதன் மரபு துணிக்கைகள் கூட கிடைத்தாலும் போதும்தான் ,பழைய  வீரியமா  நோயை ஏழாம் அறிவில் (சினிமா அறிவு )கூறிய படி உருவாக்குவது சாத்தியம் தான்.
smallpox
Smallpox

சான்று Sir Marc Armand Ruffer  எழுதிய  "Studies of the Palaeopathology of Egypt"(1921) என்ற நூல் .
Donald R. Hopkins என்ற ஆய்வாளர் World Health Organization இன்
"சின்னம்மையை வேரறுப்போம் " என்ற கரு பொருளில் நிகழ்த்திய உரையில்
இது தொடர்பாகவும் குறிபிட்டுள்ளார் !உலகின் பிரபலமான Ramses V மம்மியில் கூட இந்த சான்றை குறிபிடுகிறார் !
Ramesses V
The tomb Ramesses V


வரலாற்று மருத்துவ ஆய்வாளர்கள் கருத்து படி வரலாறில் 3௦௦ தொடக்கம் 5௦௦ மில்லியன் மக்களை இந்த சின்னம்மை பலியெடுத்து இருக்கிறது .மேலதிக விவரங்களை இங்கே காணலாம் !
The Greatest Killer: Smallpox in History

ஆக மொத்தத்தில் புதிதாய் எந்த நோயும் உருவாகவில்லை .
நம் அறிவியலும் ,இயற்கையும் சூழலை மாற்றி கொள்வதால்  நோய்களும் தம்மை தாம் மாற்றி கொள்கிறது என்பதே உண்மை!

இவ்வாறான  நோய்களின் பரவலை தடுக்கும் அடிப்படையில் தான் மம்மிகளும் ,தாழிகளும் இருந்து இருக்கலாம் !
                                  தீர்வு தெரியா சில கேள்விகள் !
  • உறங்கிய நோய்களை யாறாவது உயிர்பாக்கி வைத்து இருகிறார்களா?
  • உயிரியல் யுத்தம்  வந்தா நிலைமை என்ன ?
  • பறவைகாச்சல் போன்ற நோயின் தாய் நோய் என்ன ?
             
             இதன் பதில்கள் உலகின் ஒரு அங்கமான உங்களிடம் தான் !



0 comments:

Post a Comment