![]() |
மழை நின்ற பின்னும் எத்தனை முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் ! |
நம்மால் என்றுமே தனித்து முடிவு எடுக்க முடியாது ! நம்மையும் நம் செயல்களையும் புற சூழல் என்பது கட்டு படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை !
இதிலும் பிரச்சனைகள் என்பது எம்மை வலுவே கட்டுபடுத்துகிற ஒன்றாய் ஆட்டி படைக்கிறது .
ஒரு பிரச்சனை எம்மை சூழ்ந்த வுடன் உடனடியாக அதில் இருந்து மீள முயற்சிக்கிறோம் ,இதற்க்கு மிக பிரயத்தனபடுகிறோம். ஒன்று நாம் ஜெயிக்கிறோம் அல்லது பிரச்சனை ஜெய்க்கிறது !
நாம் ஜெயித்து விட்டால்
ஒரு வேளை பிரச்சனை ஜெயித்து விட்டால்வெற்றி என்பது கண்ணை கட்டும் போதை ,தோல்வி என்பது தூக்கத்தை கெடுக்கும் நண்பன் .- இந்து சமுத்திர தீவில் வரலாறு சொல்லி தந்தது
- இது தான் நம் விதி என நொந்து அந்த பிரச்சனை வகுத்த எல்லைக்குள் வாழ தொடங்கி விடுகிறோம் .
- பிரச்சனையின் ஓட்டத்துக்கு அடிபட்டு போகும் வாழ்க்கையை வாழ்கிறோம்
அவ்வாறு நீங்கள் எதையாவது உங்கள் இறந்த காலத்தில் நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்களானால் ,நீங்கள் வெற்றிக்கு தயாராகி விட்டு இருக்கிறீர்கள் !வாழ்த்துக்கள் !
ஒரு பிரச்சனையை நம்மால் முறியடிப்பது என்பது முடியாது என்பது உண்மையாக இருக்கலாம் !
ஆனால் அது எது வரை உண்மை என்பதை நாம்(நான் உட்பட ) உணர தவறி விட்டோம் !
குறிப்பிட்ட காலத்துக்கே அது உண்மை !
சிறிது காலத்து அப்பால் அந்த பிரச்சனை வலு இழக்கிறது அல்லது அதை நாம் வெல்ல நமக்கு சாத்தியங்கள் ஏற்படுகிறது!
அதாவது புதிய கதவுகள் திறக்க படுகிறது !கீழ் வரும் கற்பனை கதை உங்களை மேலும் தெளிவாக்கும் என நினைகிறேன் !
ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.
அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
![]() |
இல்லாத எல்லைகள் நம்மை சுற்றி அழகான வாழ்க்கை அதையும் தாண்டி |
சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதி யாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும். இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை அதனால் வலி இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும். அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.
இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்த வுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்… அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.
நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.
இல்லாத வேலியினுள், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சி யிலும் ஈடுபடமால், இது தான் விதி என்று பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்…வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …வானமே எல்லை....
![]() |
Get ready |
மாற்றம் ஒன்றே மாறாதது !
அரசியலும் சரி அரிசியியலும் இந்த விதிக்கு உட்படும்
அரசியலும் சரி அரிசியியலும் இந்த விதிக்கு உட்படும்
குறிப்பு -காதலுக்கு இந்த விதி விதிவிலக்கு சில வேளை
Just Watch :-- முதலையை மிரட்டுது சிங்கம்
Just Watch :-- முதலையை மிரட்டுது சிங்கம்
0 comments:
Post a Comment