கடந்து விட்ட நிஜம் கூட கனவானதே -நீயின்றி
சொல்லளக்கையில் மணிகணக்கை மறந்த அந்திச்சாயல்
சொற்ப செக்கன் கூட கனக்கிறது -உன் பேச்சு இன்றி
வாழும் வரை கூட வருவேன் என்ற நீ
வாய் திறக்க மறக்கிறாயோ !மறுகிறாயோ
வெறுக்க முடியவில்லை உன்னை -என்னை நீ
வெறுக்க காரணம் சொல்லவில்லையே -உனக்கே தெரியாதா ?
விழி அயர்கையில் உன் சுவாசம் வருடும் அன்று
விதி என்று இமை மூடுகிறேன் பிரிவு என்னை வருடுகையில் இன்று !
உன் சுவாசம் கூட என்னோடு பேசும் என்றறிவாய் நீ
உன் முகம் கூட காட்ட அதனால் மறுகிறாயோ
உன்னை நான் கேட்பது என்னை மறந்தாயோ!
உண்மையை சொல்ல மறுகிறாயோ !
0 comments:
Post a Comment