.
கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாத தலைப்புதான் . ஆனால் வலிகள் நிறைந்த பக்கம்
ஒன்றின் தூசு தட்டல் இந்த பதிவு .எதோ ஒருமூலையில் ஈரம் கொஞ்சம்
இருக்குமெனின் தொடருங்கள் பதிவை !
"இந்த வருடம் 7 பில்லியன் மக்களை புதிதாய் நாங்கள் இந்த பூமிக்கு
வரவேற்போம் !அதில் 1 பில்லியன் மக்கள் பசியோடு பிறக்க போகிறார்கள் !
ஏனெனில் தினமும் 1 பில்லியன் மக்கள் பசியோடு தான் தூங்குகிறார்கள் !"
இது WFP இனைய தளத்தில் இருந்த ஒரு வித்தியாசமான வேண்டு கோளின் ஒரு பகுதி
!இவை எல்லாம் உலகின் எங்கோ ஒரு மூலையில் மட்டும் அல்ல ,நாம் தினம் காணும்
மனிதரிடமும் தான் !
ஒருமனிதன் தன்னிடம் உள்ள இலட்சத்துக்கு எந்த நிலையான வைப்புக்கு வட்டி அதிகம் என A/C ரூமுக்குள் இருந்து விசாரித்து கொண்டு இருக்கிறார் !
இன்னொரு புறம் பானையை துலாவினாலும் ஒற்றை அரிசி கூட இல்லாத நிலையில் மதியம் தாண்டியும் பசியோடு கூலி தேடி போன கணவன் வரவை பார்த்து இருக்கும் பெண்ணின் நிலை "
இந்த இரண்டு பக்கங்கள் உள்ள உலகில் தான் நாமும் தினம் சுத்தி திரிகிறோம் !
அண்மையில் நடந்த சம்பவம் என்னை மேலும் உலுப்பியது !அண்மைய பலகலை கழக வேலை நிறுத்தம் என்னை திருகோணமலைக்குள்ளயே
ரோந்து செல்ல வைத்து விட்டது !
ஒரு கடையில் நின்று சோடா பானம் குடித்து கொண்டு இருந்தேன்
அப்போது அங்கே ஒரு சைக்கிள் விறகு வியாபாரி விறகு கொண்டு வந்தார் !யாவாரமும் முடிந்தது!மாற்றி காசு இல்லை விறகு வங்கி கடை காரரிடம் அங்கு இங்கு தேடி திரிகிறார்
அப்போது அங்கே ஒரு சைக்கிள் விறகு வியாபாரி விறகு கொண்டு வந்தார் !யாவாரமும் முடிந்தது!மாற்றி காசு இல்லை விறகு வங்கி கடை காரரிடம் அங்கு இங்கு தேடி திரிகிறார்
பின்னால வீட்டில எடுத்து வாறன் என பின் கதவை
திறக்கிறார்.
"அண்னே சீக்கிரம் கொண்டு வாங்க ,வீட்ட சீக்கிரம் நான் போகணும் " என்றார் விறகு விற்க வந்தவர்!நாங்கள் அவரிடம் பேச்சு கொடுத்தோம்!
"கொண்டு வந்த விறகெல்லாம் வித்துடியல் தானே ஏன் அவசர படுகிறியள்?" என்றேன்"எனக்கு அவசரம் இல்லை தம்பி பிள்ளைகள் சாப்பிடாம பள்ளிக்கூடம் போய் இருக்குதுகள் ,நான் அரிசி வேண்டி போனாதான் மதியம் சாப்பாடு, நேற்று ராத்திரியும் சாப்பாடு பத்தல்ல !இந்நேரம் அதுகள் வயிறு பற்ற தொடங்கியிருக்கும்" என்றார்
,இது வரை கூலாக இருந்த சோடா வெந்நீராய் இறங்கியது இப்போ !
அந்த தருணம் என்னை சங்கட படுத்தினாலும் நான் என்ன செய்ய முடியும் ?நானே வேலை இல்லா பயல் !என்ன செய்ய இயலும்!
சரி அப்பிடி தான் என் பாக்கெட் மணியில் இருந்து ஒரு தொகையை கொடுத்தாலும் அன்று ஒரு பிள்ளையின் பசியை தீர்க்குமே ஒழிய வேறு ஏதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதே ?"
ஆனால் நிச்சயமாய் இந்த வறுமை கோடு குறுக்கு விசாரனை செய்து ஒழிக்க பட வேண்டிய ஒன்று !
வாங்க கொஞ்சம் புள்ளிவிவரம் பார்ப்பம் ரமணா ஸ்டைல் ல ,ஆனா உண்மையான விவரம் !
கடந்த வருடம் பெற்ற தரவுபடியான The Hunger Project என்ற தளத்தின் தமிழாக்கத்தை தருகிறேன்
உலக சனத்தொகை
6.8பில்லியன் (இன்று 7.06 பில்லியன் )
உலக பசி பட்டியல்
- 925 மில்லியன் மக்கள் போதுமான உணவு இல்லாமல் இருக்கிறார்கள் !-இந்த தொகை அமெரிக்க,கனடா ,ஐரோப்பா போன்ற நாட்டில் வாழும் மொத்த மக்கள் தொகையை விட அதிகம்
- 98% ஆனா போசாக்கு அற்ற மக்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் தான் வாழ்கின்றனர்!
- பசியால் வாடும் மக்களில் 2/3 பங்கினர் ஏழு நாடுகளில் தான் வாழ்கின்றனர் Bangladesh,China, the Democratic Republic of the Congo, Ethiopia, India, Indonesia and pakistan
சிந்திக்க வேண்டி தானே இருக்கிறது ,அதற்கும் அப்பால் ஒரு ஆரோக்கிய மாற்றத்தினை ஆரம்பித்து வைக்க வேண்டியும் இருகிறதல்ல வா?
இந்த இடத்தில் ஒரு விடயம் பற்றி விவாதிக்க வேண்டி இருக்கிறது.
பட்டினியையும் வறுமையையும் பிரித்து அறிய வேண்டியுள்ளது !
the Democratic Republic of the Congo, எதியோபியா போன்ற நாடுகளின் பட்டினிக்கு வறுமை அல்ல.அது அரசியல் நிலைமை, சர்வதேச நகர்வுகள் என பரந்து விரியும் . அது போன்ற சந்தர்பங்களில் ஒட்டுமொத்த சமூகமே பசில் தான் கிடக்கிறது!
ஆனால் இந்திய ,சீனாபோன்ற நாடுகளை பார்க்கும் பொது வறுமையும் பசியும் ஒன்று தான்!
எப்பிடி இந்த வறுமையை களைய முடியும்!
சோசலிசம்?
கமூனிசம் ?
ROBINHOOD !
வில்லன் அஜித்?
இந்த வழிமுறைகள் மூலம் வறுமையை ஒழிக்க அல்லது இந்த சமூக வர்க்க வேறுபாட்டைகளைய முடியும் ?
கடைதேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைகிறதா?
எத்தனை தேங்கா உடைகிறது எத்தனை நாள் உடைக்கிறது?
கம்யுனிசம் ஆட்சி முறை, கொள்கை இன்றைய உலகுக்கு சரி வருமா ? அது எவளவு காலத்துக்கு நீடிக்கும்?
அது பணக்கார வர்கத்தின் உழைப்பை உறிஞ்சுமா?
மூலம் சாத்தியமா?
விடைகளொடும் குறுக்கு விசாரனையோடும் தீர்ப்பை நோக்கி அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..
தொடரும் .....
குறிப்பு :நீங்கள் வலை பதிவு எழுதுபவரா இங்கே இணையுங்கள் here
0 comments:
Post a Comment