யார் இந்த போகர் ?
இணையத்தில் போகிற போக்கில் தெரிச்சிட்டு போகலாம் வாங்க.
இவர் இந்திய பெருங்கண்டத்தில் வாழ்ந்த ஒரு சித்தர்.
இந்திய பெருங்கண்டம் என்பது தற்போதைய இந்தியாவை குறிப்பிடாது.அது குமரி கண்ட பரப்பை மற்றும் நேபாளம் பூட்டான் பகுதிகளையும் சேர்த்து தான்.
சர் இவர் என்ன செய்தார் ? ஏன் இவரை பற்றி நாம் அறியனும் ??
காரணம் வலுவாக இருக்கிறது! பொதுவாக சித்தர்கள் சாதாரன உலக வாழ்வில் ஈடு படும் மனிதர்களை பற்றி அக்கரை எடுப்பத்தில்லை.ஆனால் இந்த போகர் மனிதர்களை பற்றி சிந்தித்தார். அதாவது பிறந்த மனிதர் அனைவரும் சாகாமல் இருக்க வேண்டும் என எண்ணினார் .ஆனால் இது இயற்கை / இறை விதிகளுக்கு முரனானது. நோய்களும் துன்பங்களும் போன ஜென்ம பாவங்களை அனுபவித்தற்காக படைக்க பட்டவை.
இதனால் மற்ற சித்தர்களின் எதிர்ப்பை சம்பாத்தித்தார் . எல்லாத்துக்கும் மேலாக இவர் தான் கற்ற வைத்திய தகவல்களை ஒரு நூலாக எழுத வெளிக்கிட்டார். இதை மற்ற சித்தர் கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவனும் இவர் எழுதிய நூல்களை பார்த்தார் ஆனால் அந்த நூல்கள் சாதாரண மனிதர்களுக்கு புரியாத படி சிலேடையாக எழுதப்பட்டிருப்பதால போகருக்கு உதவி செய்தார்.
ஆனால் போகர் சித்தரை ஒர் கவலை வாட்டியது .இது தான் மனிதருக்கு புரியாதே எப்படி இது மனித குலத்திற்கு பயன்படும்.
இரெண்டு மருத்துவ சிலைகளை உருவாக்கினார்.
அது தான் நவ பாசன சிலை.ஒன்று தற்போது பழனியில் உள்ள சிலை.
சரி அது என்ன நவபாசன சிலை ? பாசனம் என்றால் விசம். அதாவது விசங்கள் நேரடியாக அல்லாமல் மறைமுகமாய் பயன்படுத்தினால் மற்ற விசங்களை அழிக்கும் . உதாரனமாக சேலைன் ஏற்றுவதை எடுத்து கொள்வோம், நேரடியா குடிக்க முடியாதல்ல வா அதை போல தான்.
ஒன்பது வகை பாசனங்களை திரவமாக்கினார். பின்னர் அத்திரவத்தின் அனுக்க்களை தனி தனியாக எட்டு வருட முறை மூலம் பிரித்தார் பின்னர் அதை தின்மமாக அனுக்களை கட்டினார். இவ்வாறு உருவானது தான் நவ பாசன சிலை.
இந்த சிலை என்ன செய்யும் ?
இந்த சிலையில் இருந்து வெளிப்படும் கதிர்கள் எம்முடலில் பட்டால் நோய்களை குணப்படுத்தும். இந்த சிலையில் படும் பால் சந்தனம் போன்றவை நோய் தீர்க்கும் மருந்தாகி விடும். இந்த சிலை எப்போது குளிச்சியாக வைத்திருக்க பட வேண்டும். சில சமயங்களி இந்த சிலையில் இருந்து தானாக நீர் வெளியேரும் .
போகர் இரு சிலைகளை செய்தார். மற்றய சிலை பற்றி யாருக்கும் சரியாக தெரியவில்லை .சிலர் பாறைக்குள் போகர் இதை மறைத்து வைத்திருக்கிறார் என்றும் .சிலர் செவ்வாய் கிரகத்தில் இதை வைத்ததாகவும் சில் குறிப்புகளின் அடிப்படையி நிருவுகின்றனர் .
பூமி யழியும் போது செவ்வாய் கிரகத்தில் மனித வாழ்க்கைக்கு ஏற்றதாய் அக்கிரகத்தை மாற்ற ஏதுவாய் அதை அங்கு வைத்ததாயும்ம் சொல்கிறார்கள்.
நாச கூட பூமிக்கு அடுத்ததாய் மனித வாழ்க்கைக்கு செவ்வாய் கிரகத்தையே ஆய்வு செய்கின்றனர். நீர் அங்கு இல்லை என்பதே பிரச்சனை . ஏன் போகர் சிலையில் இருந்து வரும் நீர் தீர்வாக இருக்க கூடாது.
இவை கதை போல இருந்தாலும் எதோ , ஆயிரம் உன்மை இதுக்குள் ஒழிந்திருக்கிறது.
சரி இன்னொரு பதிவில் போகரின் நூலகள் பற்றியும் அவர் செவ்வாய் கிரகத்துக்கு போகும் சாத்தியம் எப்படி எண்டும் பார்ப்போம்.
0 comments:
Post a Comment