
கேட்டால் தருவதற்கு -வள்ளல் இல்லை இங்கு
தட்டி தான் கேட்க வேண்டும் அதுவும் உரக்க !
காத்திருந்தால் மலர ஈரமில்லை பாரில்
கையதனை ஓங்கித்தான் எல்லாமே இங்கு!
வீழ்பவன் ஆளபடுவான்-மிருகமாய் நீயும் மாறு
வீழும் அதிகாரம் உந்தந காலடியில் ௧
நல்லவனாய் நீ வாழ இது ஒன்றும் புண்ணிய பூமி இல்லை
வல்லவனாய் நீ இல்லாவிட்டால் நீயும் இங்கே மண்தான்...