Thursday, October 4, 2012

செ(சொ)ல்லரித்த பக்கங்கள்


 

செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று
சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன்

உன் சேதி சொன்ன காற்று -இன்று
உயிர் குடைந்து அதையும் வாசித்ததே

தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி
தொந்தரவாய் என்மீது மோத செய்வதேனோ

மீண்டிருக்கையில் என் நரம்பு கொண்டு -இசை
மீட்டி கொள்ள ஆசையோ கொன்று போனவளே

நிலவில்லா இரவென்றாலும் ஓளி தெரிந்தது
நீளும் கனவுகளில் கூட உன்னை மறந்த போது

மீண்டும் செல்லரிக்க சொல்லெடுக்காதே
மீறிய கனத்தால் நின்று விடும்
என் இதயம் ஒற்றை கணத்தில் !

Monday, October 1, 2012

உணராத மாற்றங்கள் நம்மை சுற்றி


மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் !
மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் !



நம்மால் என்றுமே தனித்து முடிவு எடுக்க முடியாது ! நம்மையும் நம் செயல்களையும் புற சூழல் என்பது கட்டு படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை !
இதிலும் பிரச்சனைகள் என்பது எம்மை வலுவே கட்டுபடுத்துகிற ஒன்றாய் ஆட்டி படைக்கிறது .

ஒரு பிரச்சனை எம்மை சூழ்ந்த வுடன் உடனடியாக அதில் இருந்து மீள முயற்சிக்கிறோம் ,இதற்க்கு மிக பிரயத்தனபடுகிறோம். ஒன்று நாம் ஜெயிக்கிறோம் அல்லது பிரச்சனை ஜெய்க்கிறது !

நாம் ஜெயித்து  விட்டால்
  • எதற்காக பிரச்சனையை

Friday, September 21, 2012

300-500 மில்லியன் கொலைகள் செய்த உலகின் கொலையாளி !



ஏதோ படுகொலை பற்றி இருக்கும் என நினைத்து  விடாதீர்கள்   இது உறங்கிக்கொண்டு   அவ்வப்போது படை எடுக்கும்  ஒரு நோயை பற்றிய சிறு அறிமுகம் !அது தாங்க சின்ன அம்மை !(smallpox ).
SmallPox
Small Pox -The Greatest Killer



இந்த நோயை பொறுத்தவரை தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்திவிட்டோம்   என்று மனித இனம் மார் தட்டி கொள்வது ,பூனை கண்ணை மூடி பால் குடிக்கிறதை போன்றது ,இது எப்போது வேண்டுமென்றாலும் விழித்து
கொள்ள கூடிய ஒரு நோய் என்பது தான் உண்மை !

கொஞ்சம் பொறுங்க,ஏழாம் அறிவு பற்றி ஜோசிக்க தொடக்கி விடாதீர்கள் !அங்கு இது போன்ற ஒரு நோய் தானே விழித்து
கொள்ள வில்லை ,சினிமாக்காய்
விழிக்க  வைகிறார்கள் !அந்த கதையின் உண்மை தன்மை  பற்றி நான் இங்கு ஆராயவில்லை !
                        "புதுசு புதுசா நோயெல்லாம் வருது"
பொதுவாக மக்கள் இந்த வார்த்தையை கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் !
  • இதன்  நிஜ தன்மை என்ன ?
  • உண்மையில்   புதிதாய் நோய்கள் வருகிறதா ?
அல்லது
  • நாம் இன்று காணும் நோய்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததா?
கொஞ்சம் ஆராய்ந்து பாப்போம் ?


Friday, August 31, 2012

தடமாறல்கள்-காதல் தொடர் கதை

அவசரமாய்  வாகனங்கள் அசுர வேகத்தில்  செல்லும் ஒரு  தெரு !தன் டெனிமினை சற்று மடித்து உயர்த்திய படி மஞ்சள் கோட்டை கடக்கிறான் ஒரு இளைனன்  .
 

மஞ்சள் சாயம் ஒட்டி விடும் என்பதற்காய் அல்ல தேங்கிய மழை தண்ணி நாளைக்கும்போட வேண்டிய டெனிமினை நாசமாக்கி விடும் என்பதற்காய்.கடந்ததும்  அவன் கவனம் செல்பேசி திரையினை தொடுகிறது!செல்பேசியையும் சந்தியருகு பஸ் Halt டையும் சல்லடை
போட்டு தேடின சனுஜனின் கண்கள்.

 

பௌர்ணமியோரம்

அலை கூட நரைத்து கொண்டது
உன் பார்வை பட்டு
அழகான பௌர்ணமியன்று -நிலா
நீ கடல் மேல் புன்னகைத்த போது

மணல் மேல் மலை செய்து கொண்டே
மேடு பள்ளம் ரசிக்கிறேன் வதனத்தில்
மணல் கூட நறு மணக்குதே -மண்மீது
நீ மோகப்புன்னகை காட்டியதால்

என்ன கோபம் மறைந்து கொள்கிறாய்
கருந்திரை பின்னே திடீரென
என்ன தொரு வெண்மை என -நான்
மயங்க மறுத்ததை மதியிட்கு சொல்லவோ

பேசி கொண்டேயிருகிறேன் -உன்னோடு நான்
என்னையும் பொழுதையும் மறந்து
போய்கொண்டே இருகிறாய் உச்சிக்கே
கண்ணயர மறுக்கிறது -இம்மாதமும்
எனை ஏமாற்றி போவதை எண்ணி !

Friday, August 17, 2012

வறுமைக் கோடும் குறுக்கு விசாரணையும்

 .


கொஞ்சம் கூட சுவாரஸ்யம்  இல்லாத தலைப்புதான் . ஆனால் வலிகள் நிறைந்த பக்கம் ஒன்றின் தூசு தட்டல் இந்த பதிவு .எதோ ஒருமூலையில் ஈரம்  கொஞ்சம் இருக்குமெனின் தொடருங்கள் பதிவை !


"இந்த வருடம் 7 பில்லியன் மக்களை புதிதாய் நாங்கள் இந்த பூமிக்கு வரவேற்போம் !அதில் 1 பில்லியன் மக்கள் பசியோடு பிறக்க போகிறார்கள் ! ஏனெனில் தினமும் 1 பில்லியன் மக்கள் பசியோடு தான் தூங்குகிறார்கள் !"

இது WFP   இனைய தளத்தில் இருந்த ஒரு வித்தியாசமான வேண்டு கோளின் ஒரு பகுதி !இவை எல்லாம் உலகின் எங்கோ ஒரு மூலையில் மட்டும் அல்ல ,நாம் தினம் காணும் மனிதரிடமும் தான் !
         

Tuesday, August 14, 2012

மனம் கொத்தி பறவை -காதலர்கள் மனதை கொத்தியிருகுது


என்னடா எப்பவோ வந்த படத்துக்கு இப்ப  கற்பூரம் காட்டி பூச போடுறாய் ?   எண்டு  கேட்கிறது விளங்குதுங்க!
இவ்வளவு காலமாய் இந்த படத்தை பார்க்க தவறி விட்டேன் !ரெண்டு தினங்களுக்கு முன் தான் ரசித்து பார்க்கும்  படி நேரம் கூடி வத்திச்சு!(24  மணிநேரமும் நாங்க வெட்டி ஆபீஸ் வேலைங்க).கொஞ்சம் நாளாச்சு என்றதால் காமெடி ,பாடல் காணொளிகளையும்  இணைக்கலாம் என்றதாலும் தான் இவ்வளவு லேட்டா எழுதிறன் !