Thursday, March 29, 2012

மின்னூல்கள் இனி உள்ளங்கைகளில் மடியும் 40 பாகை   வரை



என்ன மின்னூல் என்றால் தொட்டுணர  முடியாததாசே அது மடியும் என்கிறேன் என முறைகிறீர்களா ?புரிகிறது உங்கள் குழப்பம் நான் சொல்ல வருவது நீங்கள் எப்படி சிறு பேப்பர் ஒன்றை கையில் வைத்து படிப்பீர்களோ அதை போல இனி ebooks ஐ படிக்கிற வசதி உங்களுக்கு இனி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிறகுக்குகள் தர போகிறது..


உலகின் முன்னணி ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனமான LG தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது .Sang Duck Yeo, (head of operations for LG Display'ச)    EPD(Electronic Plastic Display)என்கிற இலத்திரனியல் பிளாஸ்டிக் திரை மீண்டும் தங்கள் நிறுவனத்தை  திரை தயாரிப்பு நிறுவனங்களின்முன்னோடியாக நிலை நிறுத்த போவதாயும் ,e -books சந்தையில் புதிய உத்வேகப்போட்டியையும் உருவாக்க போவதாயும் ,இந்த தயாரிப்பு ஏப்ரல் 2012  தொடக்கத்தில் வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.


இனி பார்த்து பார்த்து வாங்கிய TAB கீழே விழுந்து உடைய போகிறது ,Laptop ஐ ஒன் செய்ய வேண்டும் என்ற சோம்பல் இல்லை என்ன உள்ளுக்குள் சிரிப்பது ,சிலர் உங்கள் பெறுமதியான iPhone  ஐ பார்த்து சிரிப்பது எனக்கு புரிகிறது .இந்த தயாரிப்பை பற்றி தெரிந்து கொள்ள முன் இதனுடன் தொடர்பான சில தொழில்நுட்பங்கள் பற்றி பார்க்கலாமே வாங்க .இல்லை என்றால் கீழே உள்ள பச்சை கோட்டுக்கு கீழே உள்ள பந்தியை வாசியுங்கள் அது தான் உங்களுக்கு GreenSignal  லைன்......


இதற்கு முன் நாம் பாவிப்பது LCD(liquid Crystal Display), LED(Ligh Emitting dioad asDisplay) திரைகள் .இவை எல்லாம் மின்னனுக்களை ஒளியாக காலுபவை. சுருக்கமா சொன்னா தாம் உருவாக்கும்   ஒளியை எம் கண்களுக்கு அடிப்பவை . ஆனால் EPD இதிலிருந்து முற்றாக மாறுபட்டவை .அதாவது எப்படி சாதாரண ஒரு பத்திரிகை படிப்பதோ அதை போன்றது .எம் முகத்திற்கு பின்னாடி இருந்து வரும் ஒளியை மட்டும் தான் தெறிக்கும் இதனால் எம் கண் சோர்வடையாது .இது தான் இந்த தொழில்நுட்பத்தின் plus point .
அதுமட்டுமல்லாது LCD ,LED உடன் ஒப்பிடும் பொது மிக சொற்ப மின்சாரமே செலவாகும் .




"    இந்த மின்சாரத்த சேமிச்சு  என்ன செய்றது எண்டெல்லாம் கேட்காதிங்க .அந்நியன் ஸ்டைல  சொன்னா "ஒருத்தன் ஒரு display  ல இவ்வளவு மின்சாரம் சேமிச்சா , நூறு பேர் ஆளுக்கு 2display ல எவ்வளவு மின்சாரம் சேமிக்கலாம் !1௦௦௦ பேர் .............  1௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பேர்  ..?     "




இந்த தொழில்நுட்பத்தை  சில ஆண்டுகளுக்கு முன்னமே வேறு வேறு ஆய்வு சாலைகளில் விஞ்ஞானிகள்  உருவாக்கி விட்டார்கள் .ஆனால் அதில் இரண்டு குறைகள் இருந்தது
   1)    சாதாரண பேப்பரை உங்களால் REFRESH ,Zoom செய்ய முடியுமா ?இதைபோன்ற
         ஒரு     சிக்கல் தான் இங்கு refresh,Zoom செய்யமுடியும் ஆனால் ஒரு
              சில     செக்கன்       தாமதமாகும்.
2 )     அடுத்தது முன்னைய பக்கத்தின் நிழல் ஒரு சில செக்கனுக்கு தெரிந்தது      .இந்த நிழலை "ghost images"(பேய்களின் விம்பம் ) என்றார்கள் .


ஆனால் LG நிறுவனம் இந்த 2 குறைகளையும் தீர்த்து தன் தயாரிப்பினை வெற்றியாக  செய்துள்ளது .இன்னொரு சுவாரசியம் என்ன என்றால் இந்த SCREEN  ஐ அதன் நடுவில் இருந்து  40  பாகை வரை மடிக்கலாம் (மடியுமா? மடியும்!)
இதன் தடிப்பு 0.7mm
இதன் நீளம்   6-inch
அதன் நிறை 14grams
1.5 m உயரத்தில் இருந்து சிறு சுத்தியலை போட்டா கூட தாக்கமில்லை.(எவ்வளவு  அடிச்சாலும் தாங்குமோ )



ஆனால் இந்த  பெரிய தயாரிப்பு நிறுவனம் நகல்களின் ராட்சியமான  சீனாவில் உள்ள தொழில்ரீதியான  தயாரிப்பு நிறுவனத்தை வாடைக்கு அமர்த்தி தான் உற்பத்தியை  செய்து ஐரோபிய சந்தையில் சந்தை படுத்த போகிறது .இது ஐரோபிய வியாபார சந்தையின் புது முயற்சி கூட.இத தான் EPD ஐ கண்டுபிடிச்சு CNINA கையில கொடுகிறது எண்டு..............


அடுத்த மாதமே இது வெளிவந்தாலும் நம்ம கையில மடிய பொறுத்திருந்து தான் ஆகணும்  ........




அடுத்த பதிவில் சந்திப்போம் .
"ஒவ்வொரு வியுகமும் தேவை  மச்சான்" 



 "Always bear in mind that your own resolution to succeed, is more important   than any other one thing."

 வெற்றிக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானது உங்கள் சொந்த சிந்தனையும் பரிமாணமும் சொந்த தூரநோக்கு அலசல்களுமே  என்பதை நினைவில் கொள்ளுங்கள்

நம்ம பாசையில - எதுகின்ரன் , அடுத்தவன் பேசுக்கு எதுக்கு ஆடனும் என்றன்  அப்பிடி ஆடினா எல்லாம் போயிடும்மப்பா 

0 comments:

Post a Comment