Monday, July 30, 2012

மிருகமாய் நீயும் மாறு

கேட்டால் தருவதற்கு -வள்ளல் இல்லை இங்கு
தட்டி தான் கேட்க வேண்டும் அதுவும் உரக்க !

காத்திருந்தால் மலர ஈரமில்லை பாரில்
கையதனை ஓங்கித்தான் எல்லாமே இங்கு!

வீழ்பவன் ஆளபடுவான்-மிருகமாய் நீயும் மாறு
வீழும் அதிகாரம் உந்தந காலடியில் ௧

நல்லவனாய் நீ வாழ இது ஒன்றும் புண்ணிய பூமி இல்லை
வல்லவனாய் நீ இல்லாவிட்டால் நீயும் இங்கே மண்தான் !

Sunday, July 29, 2012

மறந்தாயோ மறுத்தாயோகனவுகள் கூட உன் தடத்தால் நிஜமானதடி
கடந்து விட்ட நிஜம் கூட கனவானதே -நீயின்றி 

சொல்லளக்கையில் மணிகணக்கை மறந்த அந்திச்சாயல்
சொற்ப செக்கன் கூட கனக்கிறது -உன் பேச்சு இன்றி

வாழும் வரை கூட வருவேன் என்ற நீ
வாய் திறக்க மறக்கிறாயோ !மறுகிறாயோ

வெறுக்க முடியவில்லை உன்னை -என்னை நீ
வெறுக்க காரணம் சொல்லவில்லையே -உனக்கே தெரியாதா ?

விழி அயர்கையில் உன் சுவாசம் வருடும் அன்று
விதி என்று இமை மூடுகிறேன் பிரிவு என்னை வருடுகையில் இன்று !

உன் சுவாசம் கூட என்னோடு பேசும் என்றறிவாய் நீ
உன் முகம் கூட காட்ட அதனால் மறுகிறாயோ


உன்னை நான் கேட்பது என்னை மறந்தாயோ!
உண்மையை சொல்ல மறுகிறாயோ !

Sunday, July 22, 2012

மண்டை யோட்டை இனம்காணும் தொழில் நுட்பம்

மண்ட யோட்டை இனம்காணும் தொழில் நுட்பம் ஆங்காங்கே  தோண்டப்படும் புதை குழிகள் அதிகரித்து தினம் மண்டை ஓடும்  மனித எச்சங்களும் தோண்டப்பட்டு  கொண்டு இருக்கிறது!சில இடங்களில் இவை வெறும் குப்பைகளாய் எண்ணிக்கை கணக்கெடுப்போடு மட்டும் முடிந்து விடுகிறது .சில சமயங்களில் இது யாருடையவை என கண்டறிய வேண்டிய நிர்பந்தம் காவல் துறைக்கும்  நிபுணர்களுக்கும் -இதற்கும் அப்பால் மனித உரிமை குழுக்களுக்கும் உள்ளது .

Friday, July 20, 2012

மூன்றாம் கண் -?


பதிவின் ஆரம்ப பகுதி சற்று ஆன்மீகம் போல இருந்தாலும் இது முழுமையான அறிவியல் பதிவு.
கீழை தேச மதத்தவர்களிடம் அதுவும் குறிப்பை இந்துக்கள் மத்தியில் மூன்றாம் கண் (நெற்றிக்கண் )என்னும் தத்துவம் மேலோங்கி இருக்கிறது .அவர்கள் அதை வெறுமனே கடவுளின் பெயரால் நம்புகிறார்கள் .அதிர்மறையாய் கடவுளின் பெயரால் கூறப்பட்டு இருப்பதால் முற்றாய் மாறுகிறார்கள் கடவுளே இல்லை என்னும் வர்க்கம் !அக மொத்தத்தில் மூன்றாம் கண் இருகிறதா? நெற்றியில் தான் இருக்கிறதா? என்ற குழப்பம் உங்கள் மனதில் தற்போது முளைவிட்டுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

"கேள்விகள் தான்  தெளிவுக்கு முதல் வழி
                                      விடுதலைக்கான முதல் அடி !"

சரி  விசயத்துக்கு வருவோம் .முதலில் இந்த மூன்றாம் கண் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது  .அறிவியல்  பெயர் என்ன என்பதை பார்த்து விடுவோமே !.இது pineal gland எனப்படுகிறது .அதாவது

Saturday, July 14, 2012

நாம் இழந்த மஞ்சள் (heal more than 577 diseases including CANCER ,& BRAIN TUMER also)


"மஞ்சளே விளையாத நாட்டுகாரன் அதற்கு உரிமம் வேண்டி விட்டான்"  ஏழாம் அறிவில் சூர்யா   என கூறுகிறார் .

இந்த ஏழாம் அறிவு வணிக அறிவாய்  இருக்கலாம் .ஆனால் அது மஞ்சள் பாவனையாளர்களிடம் ஒரு பெருமிதத்தை ஏட்படுதியதே   தவிர ஒரு சிலரிடம் தான் இதை பற்றி நம் முன்னோர் எங்காவது கூறியிருகின்றனரா என தேட தோன்றியது .


அண்மையில் வெயிலில் காயவைக்க பட்டிருந்த மஞ்சளை பார்த்தேன் .இது தொடர்பை தேடிய  பொது சில ஆய்வு   முடிவுகளை இனத்தில் அறிந்து கொண்டேன் .
இந்த பதிவு மஞ்சளும் புற்று நோயும் பற்றியது .பிடித்துகொண்டால் தொடர்ந்து பற்றி செல்லுங்கள் இந்த பதிவை .