Friday, April 22, 2011

கலக்கும் 7 வரிசையில் x7

தினம் ஒரு புதிய படைப்புகள் வெளி வந்த வண்ணம் உள்ளன .இந்த வரிசையின் தற்போதைய புதிய nokia வின் வெளியீடு வெளிவந்துள்ளது .நோக்கியா x7  என்பதுதான் இதன் பெயர். இது கேம்ஸ் விளையாடுவதில் பிரியம் கொண்டவர்களுக்கான விசேட தயாரிப்பு  என நோக்கியா தெரிவித்துள்ளது

இதன் விலை 547$ 
 ஆனால் அப்படி சொல்வதை விட புகைப்படம் ,வீடியோ போன்றவற்றை போனில் கையால் பவர்களுக்கான விசேட தயாரிப்பு என்ன செல்பேசி வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .காரணம் இதன் இரட்டை led  பிளாஷ் விளக்கு மற்றும் 8 megapixel rear கேமரா வசதி ,4 அங்குலம் வரையான திரை மற்றும் 720p hd வீடியோ ஸ்டீமிங் வசதி என்பனவே இவ்வாறு வல்லுனர்கள் முக்கித்துவம் கொடுக்க காரணம் .Galaxy on Fire,Asphalt 5 HD ஆகிய செல்பேசி விளையாட்டுகள் இத்தொலைபேசியுடன்  இணைக்கப்பட்டு  வருகிறது .மேலும் ovi தளத்தில் உள்ள விளையாட்டுகளை இணைத்து கொள்ளவும் முடியும்

Tuesday, April 12, 2011

மலேசியா பாலத்தை முறியடித்த அபுதாபி இணைப்பு பாலம்

உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன .
விண்ணை முட்டும் கோபுரங்கள் எழுந்த  வண்ணம்  உள்ளன .இந்த வரிசையில் உலகில் மிக உயரத்தில் உள்ள இணைப்பு பாலம் என்ற பெயரை இதுவரை  மலேசியாவில் உள்ள Petronas Tower  என்ற கோபுரத்தில் உள்ள இணைப்பு கோபுரமே கொண்டிருந்தது. ஆனால் இதனை தற்போது ஐக்கிய அரபு ராச்சியத்தில்  அபுதாபியில் உள்ள nation towers என்ற இரட்டை கோபுரங்களை இணைக்கும் இணைப்பு பாலம் இந்த சாதனையை முறியடித்துள்ளது . nation tower 1 மற்றும்  nation tower 2  ஆகியவற்றின் 50 மற்றும் 54 ஆவது மாடிகளை  இணைக்கும் இணைப்பு பாலம் இந்த சாதனை பெயரை கடந்த april 10 ஆம் திகதி பெற்று கொண்டுள்ளது .

இது தரை மட்டத்தில் இருந்து 202.5 meter  உயரத்தில் அமைந்துள்ளது .இது மலேசிய பலத்தை விட 30 meter  கூடுதலான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இப்பாலத்தை தரையில் வைத்து வடிவமைத்து பின்னர் நீரியல் உயர்த்திகளை பாவித்து  உயர்த்தி பொருத்தியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது .
கோபுரங்கள் இணைவது போல மனித மான்களும் இணைந்துகொண்டால்  தான் உயர்ந்த கோபுரங்கள் இடிக்கப் படாமல் இருக்கும்