Friday, July 20, 2012

மூன்றாம் கண் -?


பதிவின் ஆரம்ப பகுதி சற்று ஆன்மீகம் போல இருந்தாலும் இது முழுமையான அறிவியல் பதிவு.
கீழை தேச மதத்தவர்களிடம் அதுவும் குறிப்பை இந்துக்கள் மத்தியில் மூன்றாம் கண் (நெற்றிக்கண் )என்னும் தத்துவம் மேலோங்கி இருக்கிறது .அவர்கள் அதை வெறுமனே கடவுளின் பெயரால் நம்புகிறார்கள் .அதிர்மறையாய் கடவுளின் பெயரால் கூறப்பட்டு இருப்பதால் முற்றாய் மாறுகிறார்கள் கடவுளே இல்லை என்னும் வர்க்கம் !அக மொத்தத்தில் மூன்றாம் கண் இருகிறதா? நெற்றியில் தான் இருக்கிறதா? என்ற குழப்பம் உங்கள் மனதில் தற்போது முளைவிட்டுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

"கேள்விகள் தான்  தெளிவுக்கு முதல் வழி
                                      விடுதலைக்கான முதல் அடி !"

சரி  விசயத்துக்கு வருவோம் .முதலில் இந்த மூன்றாம் கண் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது  .அறிவியல்  பெயர் என்ன என்பதை பார்த்து விடுவோமே !.இது pineal gland எனப்படுகிறது .அதாவது
பீனியல் எனப்படுகிற ஒரு  நாளமிலா சுரப்பி .இதை தமிழில் கூம்பு சுரப்பி அல்லது மனோன்மணி சுரப்பி என்பர் .இது அறிவியல் ரீதியாய் மனநிலை  சம்பந்தமான சுரபியாக கூறபடுகிறது .அதாவது நம் உளவியல் செயற்பாடுகளை கட்டுபடுத்துகிறது .கூடவே சில உடற்  கூறுகளின் வர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது.
இச்சுரப்பியால் மெலடோனின்  (melotonin ) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது .இதுவே  உலவிய மாற்றங்களை கட்டுபடுத்துகிறது .சிறப்பான வகையில் இது சுரக்கு மாயின் இது நம்மை ஆனந்த  நிலையில் வைத்திருக்கும் .இந்த  சுரப்பி சுரப்பது நம் கண்களில் வெளிச்சம் படும் போது சுரப்பது தடைபடுகிறது .கண்ணை மூடி இருக்கும் போது அதிகமாய் சுரக்கும் (தியானத்தின் போது சிறப்பாய் செயற்படுவதாயும் கருத்து உண்டு).night duty  செய்பவர்கள் குழப்பமான சோர்வு மன நிலையில் இருப்பதற்கும் இதுவே என அறிவியல் ஆய்வுகள் கூறுகிறது.
ஒவ்வொரு மிருக உடலும் கால  சக்கரத்தை கொண்டுள்ளது. அதுபோல மனிதனின் கால சக்கரத்தை ஆள்வதும் இந்த பீனியல்  சுரப்பி தான் .

இனி இதன் அமைவிடத்தை அறிவியல் எங்கு குறிப்பிடுகிறது  என்று பார்போம் .நெற்றி கண் எங்கு குறிபிடப்படுகிறதோ அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் ஆழமாய் இந்த சுரப்பி .மூளையின் , மண்டை ஓட்டின் மத்தியில்  ஒரு பாதாம்  பருப்பின் அளவில் உள்ளது .இதன் எடை 1 கிராம் ஐ விட சற்று அதிகம் .மூக்கு நாசி துவரம் முடியும் இடத்தற்கு சற்று மேலே அமைந்துள்ளது .




ஆன்மாவின் இருக்கை என கருத படும் இந்த இடம் குண்டலினி சக்கர கோட்பாட்டில்  
சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்)   இருக்கும் இடத்துடன் சம்பந்தபடுகிறது .
ஆக மொத்தத்தில் குண்டலினி முயற்சியில் வெற்றி பெரும் போது மூன்றாம் கண்ணை பயன்படுத்த கூடிய தகுதியை நாம் பெறுவது உறுதி .

கூடவே இன்னொரு விசயத்தையும் நாம் பார்க்கலாம் .
"தமிழென்னும் போதினிலே இன்பதேன் வந்து பாயுது காதினிலே "
"தமிழுக்கு அமுதென்று பேர் "

இவையெல்லாம் வெறும் கவி நயம்  என்று  இது வரை நினைதேன் .ஆனால் அது அர்த்தம் பொதிந்த சொல் என்று புரிய எவளவு காலம் ஆகி விட்டது .
காரணம் "ழ" கரம் மற்றும் அதை வாழ்கை யோடு தொடர்பான சொற்களில் ழகரத்தை சேர்த்த தமிழனின் அறிவியலையும் அவன் தூர நோக்கையும் --அதன் ரகசியத்தை ஒலித்த அவன் பிற்போக்கையும் எண்ணி வியக்க வேண்டியுள்ளது .


வாழ்க்கை , தொழில் , தமிழ் , ஒழுக்கம், மழை , அழகு , விழா , வாழ்த்து , உழவு , உழைத்தல் .. ...

என்ன சம்பந்த மில்லாமல் பதிவில் பிதற்றுகிறாய் என்று பேசுவது புரிகிறது!ழகரத்தை உச்சரிக்கும் போது இந்த மனோன்மணி சுரப்பி (அந்தாங்க பீனியல் சுரப்பி )சற்று அதிகமாய் சுரக்குகிறது .மன+ உள் + மணி = மனோன்மணி.இந்த கரத்தை  நாம் உச்சரிக்கிறபொழுதெல்லாம் , மூளையில் உள்ள பீனியல் சுரப்பியானது தூண்டப்படுவதால், மனத்தில் உற்சாகம் பிறக்கிறது ....எண்ணங்கள் லேசாக  ,  நம்மை துயரத்தில் ஆழ்த்தும்  மனோபாவத்திலிருந்து  மெல்ல விடுவித்துக்கொள்கிறோம் நம்மை அறியாமலேயே.... 


 "தமிழ் 'ழ' : இப்போது ழவிற்கு வருவோம்... ழ என்று உச்சரிக்கும்போது என்ன செய்கிறோம்? நாவை மடக்கி மேல் அன்னத்தில் தொட வேண்டும்- இப்போது மூளை பகுதியில் உள்ள பீனியல் சுரப்பி ஆக்டிவேட் ஆகும். அதாவது சஹாஸ்ராதார சக்கரம் திறக்கிறது. பின் என்ன செய்கிறோம்? ஒலி வருவதற்காக சற்று அழுத்தம் குடுத்து 'ழ' என்று உச்சரிக்கிறோம். மூலாதாரத்தில் உள்ள சூட்டின் காரணமாக, விந்து சுரப்பியில் உள்ள விந்துவின் சாரமானது எப்போதும் சிறிதளவு பதங்கமாகிக்கொண்டே இருக்கும். சத்தம் வருவதற்காக வாயில் சிறிது அழுத்தம் கொடுக்கிறோமே, அப்போது அந்த ஓஜஸ் சக்தியானது சட்டென்று ஒருவினாடியில் அனைத்து சக்கரங்களையும் கடந்து மேலேறி மூளைக்கு சென்று நிரம்புகிறது. இந்த ஓஜஸ் சக்தியானது மூளைக்கு நலமும், வளமும், அமைதியும், சீர்மையும் அளிக்கிறது. இதுவே தமிழ் 'ழ' உருவான ரகசியமாகும். 'ழ'வை சரியாக உச்சரித்தால் இன்னும் ஏராளாமான பலன்கள் கிடைக்கும்." ---http://itslife-sandalfingers.blogspot.com/2012/04/blog-post_24.html

என்ன இப்போது ஒத்து கொள்கிறீர்களா?
1) மூன்றாம்  கண் இருப்பதை ?
2) தமிழின் பெருமையை 
சரி சரி சிந்தித்து சூடாகி இருக்கும் உங்கள் மூளை சற்று ஆக இந்த காணொளியை பாருங்க சிரிப்பு வந்தா சிரியுங்க 

4 comments:

  1. for more knowledge http://www.logoschristian.org/pineal/

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே.... தமிழின் பெருமையை புரிந்து கொள்ள ஒரு சோற்று பருக்கை தான் இது...

    ReplyDelete
  3. ழகர சொற்களை உச்சரிக்கும் போது ஒரு அதிர்வு அலையை நாம் உணர முடிகிறது..

    ReplyDelete