Monday, August 13, 2012

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க !



இது தான் பல இனைய பாவனையாளர்களின் கனவு!
பலருக்கு சந்தேகம் கூட!

உண்மையில் இது சாத்தியமா ?
பதில் ஆம் தான் !


ஆனால் அதிகமானவர்களின் இலக்கு data entry , typing , bpo jobs ,இதை பற்றி (இந்த பதிவில் வீட்டில் இருந்து கொண்டு செய்யும் வேலையை வெறும் keyboard ஐ தட்டும் வேலையை  பற்றி சொல்ல வில்லை .கொஞ்சம் வித்தியாசமான வேலை -சரியாக சொன்னால் கைநிறைய பணம்(அதைவிட பொருத்தம் வங்கி
நிறைய பணம் என்பதுதான்)அந்த அளவுக்கு இது சாத்தியம்.

1) நீங்கள் போட்டோ எடுப்பதில் திறைமை சாலியா !அல்லது உங்களிற்கு போட்டோ எடுக்க இயலுமை உண்டா?
(உங்களிடம்  4mega pixel அளவு தகுதி  உடைய கமெரா இருக்க வேண்டும்!
ஐ போன்.ஏனைய  நல்ல போன் என்றாலும் பரவாயில்லை!)


அல்லாவிட்டால்
2)உங்களால்  சிறந்த graphic designing செய்ய முடியுமா(போடோஷப் tool.adobe illustrate   ஐ நன்றாய் கையாள முடியுமா?)

இந்த ரெண்டில் ஏதாவது இருந்தாலும் உங்களால் நிச்சமாய் பணம் சம்பாதிக்க முடியும்  !
கண்ணா லட்டு தின்ன ஆசையா?
கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா!


imagination போதும் பதிவுக்கு வாருங்கள் இன்னும் விஷயம் இருக்கு!

உங்கள் போட்டோ,GRAPICS போன்றவற்றை இணையத்தில் விற்க முடியும் .அதுவும் ஒரே படத்தை பலருக்கு விற்க முடியும் !ஒவொரு டோவ்ன்லோட்ஸ் இக்கும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் !

1 ) fotolia.com

இது உங்கள் புகைப்படம்,மற்றும் Grapics களை விற்க மிக சிறந்த தளம் !ஏறத்தாள இன்றைய நாளில் 18,282,599 படைப்புகள் இதில் இருக்கிறது!மில்லியன்க்கும் அதிகமான வாடிக்கை யாளர்கள் இருக்கிறார்கள் இந்த தளத்தில் !
நீங்கள் செய்ய வேண்டியது முதலில் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள் .
இங்கே
பதிவு செய்த பின் இந்த முகவரிக்கு சென்றால் தேவையான  விதிமுறைகளை வாசித்து அறிய முடியும் !
http://en.fotolia.com/Member/UploadContent
பிரதான விதிமுறைகள்
உங்கள் படைப்பு குறைந்தது 4mpixel தரமாவது இருக்க வேண்டும்  !
உங்கள் படைப்பு 30MB க்க மேற் பட கூடாது .
உங்கள் படைப்பு resize செய்யாமல் upload பண்ண படவேண்டும் .
 மேலும் உங்கள் படைப்பு உங்களுடையதாகவே -இதுவரை எங்கும் வெளிவராததாய்  இருக்க வேண்டும் .
எந்த ஒரு trade marks ஐயும் கொண்டு இருக்க கூடாது !

உங்கள் படைப்பை நீங்க upload செய்து இரு தினங்களுக்குள் அது அங்கீகரிக்கபட்டதா இல்லையா என தெரிந்து விடும் !
அங்கீகரிக்கபட்டிருப்பின் உங்கள் படைப்பின் ஒவ்வொரு downloads க்கும் ௦.30  யூரோ கிடைக்கும்.(இது உங்கள் தரத்தை பொறுத்து உயர வாய்ப்பு உண்டு!)

இந்த படைப்பு upload  செய்து ஒருவாரத்தினுள் 48 யூரோக்களை  சம்பாதித்துள்ளது!
எவ்வளவுக்கு எவ்வளவு தரமான ,வித்தியாசமான படைப்பை காட்சிபடுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் பணக்கணக்கும் உயரும்!
குறிப்பு :- இங்கே photshop ஐ விட நிஜ புகைப்படங்கள்,adobe illustrate   தயாரிப்புகளுகே   அனுமதி இலகுவில் கிடைகிறது!
முயன்று தான் பாருங்களேன்!

அடுத்து நாம் போட்டோ ஷாப் ஐயும் அனுமதிக்க  கூடிய ஒரு ஒரு தளத்தை பார்க்க போறம்!
ஆனால் இந்த தளத்தில் அனுமதி கிடைக்க எங்கள் படைப்புகளின் தகுதி
கொஞ்சம் உசரத்தில் இருக்க வேண்டும் !

2)Shutterstock 

 

இங்கே  நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள் !
பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்!

அதன் பிறகு தான் வக்கிறாங்க ஆப்பு !எங்கள் தகுதியை நிருபிக்க வேண்டும் .
ஆக  குறைந்தது 10 மாதிரி படைப்புகளை upload செய்ய வேண்டும்!
அதன் பின் அவற்றை பரிசீலித்து உங்களுக்கு Contributor அந்தஸ்து தருவார்கள் அந்த அந்தஸ்து கிடைத்தால் உங்களால் பணம் சம்பாதிக்க தொடங்க முடியும் !

 கை நிறைய சம்பாதிக்க வாழ்த்துக்கள் !இன்னொரு பணம் சம்பாதிக்கும் வழியில் சந்திக்கும்  வரை காத்திருங்கள்!
-உங்க வியுகம் -

2 comments:

  1. நல்லதொரு தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்களா? தாங்கள் இதுபோல பணம் சம்பாதித்துள்ளீர்களா?

    ReplyDelete
  2. படுகை.காம் வந்து உங்கள் பதிவுகளைச் செய்தால் பலன் கிடைக்க ஆவன செய்து தருகிறேன்...

    தொடர்பு கொள்ள ஆதித்தன் 900302100

    ஆன்லைன் ஜாப் சைட் படுகை.காம் விசிட் www.padugai.com

    ReplyDelete