
செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன் உன் சேதி சொன்ன காற்று -இன்று
உயிர் குடைந்து அதையும் வாசித்ததே
தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி
தொந்தரவாய் என்மீது மோத செய்வதேனோ
மீண்டிருக்கையில் என் நரம்பு கொண்டு -இசை
மீட்டி கொள்ள ஆசையோ கொன்று போனவளே
நிலவில்லா இரவென்றாலும் ஓளி தெரிந்தது
நீளும் கனவுகளில் கூட உன்னை மறந்த போது
மீண்டும் செல்லரிக்க சொல்லெடுக்காதே
மீறிய கனத்தால் நின்று விடும்
என்...